பொது செய்தி

இந்தியா

ஹிந்து மடத்தின் தலைவராக முஸ்லிம் நபர் தேர்வு

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
Muslim, Gadag, Lingayat, Mutt, Karnataka, லிங்காயத், மடம், தலைவர்

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: கர்நாடகாவில், கடக் மாவட்டத்தில் உள்ள லிங்காயத் மடத்தின் தலைவராக முஸ்லிம் மதத்தை சேர்ந்த திவான் ஷரீப் முல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர், 12ம் நூற்றாண்டில் தோன்றிய லிங்காயத் சீர்திருத்தவாதியான பசவண்ணாவின் போதனைகளை பின்பற்றி வந்துள்ளனர்.

சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீஜகத்குரு முருகராஜேந்திர மாதா மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 361 மடங்களில் கடக் மாவட்டத்தில் உள்ள மடமும் ஒன்று. இங்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இதன் தலைவராக தான் ஷரீப் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் பெற்றோர், லிங்காயத் தலைவர்களின் கருத்தில் ஈர்க்கப்பட்டு, மடத்திற்கு இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர்.

திவான் ஷரீப் கூறுகையில், அனைவரும் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பசவாவின் கொள்கைகளை பின்பற்றி, முன்னேறி செல்வோம். நான் சிறு வயது முதல் பசவாவின் போதனைகளில் ஈர்க்கப்பட்டேன். ஓய்வு நேரங்களில் பசவண்ணா மற்றும் 12ம் நூற்றாண்டின் பிற சிவனடியார்கள் குறித்த சொற்பொழிவுகளை நடத்தினேன். முருகராஜேந்திர சுவாமிஜி எனது சிறிய சேவையை அங்கீகரித்து என்னை அழைத்து சென்றார். பசவண்ணாவும், எனது வழிகாட்டியும் பிரசாரம் செய்த அதே பாதையில் நான் செல்வேன். இவ்வாறு அவர் கூறினார். இவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் வரும் புதன்கிழமை, மடத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.


latest tamil news


கஜ்ஜூரி மடத்தின் மடாதிபதியாக இருக்கும், ஸ்ரீமுருகராஜேந்திர கொரனேஸ்வர சுவாமிகள் கூறுகையில், என்ன மதம், ஜாதியை சேர்ந்தவர் நீங்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல. நல்ல எண்ணம் மற்றும் தியாகம் செய்வதற்காக கடவுள் ஒரு பாதை அமைத்து கொடுத்தால், மனிதர்கள் உருவாக்கிய பிறப்பு மற்றும் ஜாதி என்ற கட்டுப்பாடுகளை கடந்து அதனை செய்ய வேண்டும் என்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-பிப்-202010:07:51 IST Report Abuse
Bhaskaran மடத்தில் இனி நோன்பு கஞ்சி ஊற்றுவார்கள்
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21-பிப்-202012:51:04 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்தக்குமாதம் எனபது இந்தியாலேந்துதான் வாந்தது எனலாமா ?பிகாஸ் தான்னை ஹிந்து என்றுபெருமையுடன் கூறம்பலர் இந்தோனேஷியா தாயக=லாந்திலோகம்போடியாலேயும் இருக்கா கடாரம் வென்ற சோழமன்னர்களையும் படிக்கிறோம் செங்கிஸ்கான் கோரி கனஜினெல்லாம் கொள்ளை அடிக்கவேதான் நம்ம நாட்டின்மீதுபடை எதுத்துவந்தானுக இது சரித்திரம் கோரி யை க்கொன்றது பிரித்விராஜ் என்ற மன்னர்தான் எப்படி என்பதுதெரியுமா ?கோரி கொலைகாரங்கம் கொள்ளைக்காரன் அவன் ப்ருத்விரான்=ஜானின் கணைகளை பிடுங்கினான் ஓசைவரு திக்கு அறிஞ்சு அம்பு எய்வதுலே வீரன் ப்ருத்விராஜன் கோரிகேலியா ஓசைகேட்டு அம்பெய்வதிலே நீ சூரனாமே எங்கே அம்பை எய்துவிடு என்றான் கேட்டதும் ப்ருத்விராஜன் கோரியின் குரல்வந்த திசையிலே அம்பை எய்தான் கொரு=யிந்தலை தூண்டிச்சு விழுந்தது இது கதை அல்லா சரித்திரம் ஐய்யா சரித்திரம் நாமெல்லாம் வீரர்பரம்பரைகளேதான் தமிழ்நாட்டுலேயும் எவ்ளோமான்னர்களின் வீரம்பற்றி படிச்சுருக்கோம்
Rate this:
Cancel
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
21-பிப்-202011:21:08 IST Report Abuse
SanDan Lingayats are vegetarians. Did he become a pure vegetarian. Else, his taking over leadership is in the first place not valid.
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
21-பிப்-202017:55:04 IST Report Abuse
s.rajagopalanThere are vegetarians among muslims too He must be a vegetarian...no doubt....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X