பொது செய்தி

தமிழ்நாடு

நூலிழையில் உயிர் பிழைத்தேன்: கமல் பேட்டி

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (53)
Share
Advertisement
Kamal, Indian2, Crane, Accident, KamalHaasan, ShootingSpot, கமல், கமல்ஹாசன், கிரேன், விபத்து, நிதி,

சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் தான் நூலிழையில் உயிர் பிழைத்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி., பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. படத்தின் பாடல் காட்சிக்காக, பிரமாண்ட அரங்கு அமைக்கும் பணியின் போது, நேற்றிரவு (பிப்.,19) ராட்சத கிரேன், அறுந்து விழுந்தது. இதில், உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவியாளர் சந்திரன் மற்றும் தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 10 பேர் காயமடைந்தனர்.


latest tamil news


உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் கமல் பேசியதாவது: உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்குகிறேன். உயிரிழந்தவர்களுக்கு இந்த இழப்பீடு போதாது. என் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பாகவே இதை கருதுகிறேன். கிரேன் விபத்து நடந்த 4 நொடிகளுக்கு முன்பு தான் இயக்குனர் அங்கிருந்து நகர்ந்து சென்றார். கிரேன் விழுந்த கூடாரத்தின் அடியில் தான் நானும், கதாநாயகியும் இருந்தோம். நான் இரண்டு அடி நகர்ந்து இருந்தால் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டேன். நூலிழையில் உயிர் தப்பினேன். சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு கூட பாதுகாப்பும், காப்பீடும் கொடுக்க வேண்டியது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
22-பிப்-202019:51:48 IST Report Abuse
Subramanian Arunachalam நான் இரண்டு அடி நகர்ந்து இருந்தால் உயிரோடு இருந்திருக்க மாட்டேன் . நங்கள் வருத்தப்படுவது எல்லாம் நீங்கள் ஏன் நகரவில்லை என்பதே
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
22-பிப்-202013:55:40 IST Report Abuse
V.B.RAM நான் இரண்டு அடி நகர்ந்து இருந்தால் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டேன். நூலிழையில் உயிர் தப்பினேன். ? அதனால்தான் பெரியார் அன்றே சொன்னார் கடவுளை நம்பாதே. என்று .
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
22-பிப்-202013:53:43 IST Report Abuse
V.B.RAM நான் இரண்டு அடி நகர்ந்து இருந்தால் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டேன். நூலிழையில் உயிர் தப்பினேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X