பொது செய்தி

இந்தியா

பெங்களூரு: 2 ஐ.டி ஊழியர்களுக்கு எச்1என்1 வைரஸ் தாக்குதல்

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

பெங்களூரூ: பெங்களூரூவில் செயல்பட்டு வரும் ஜெர்மனி ஐ.டி., நிறுவன ஊழியர்கள் 2 பேர் எச்1என்1 வைரசால் பாதிக்கப்பட்டுஇருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டுள்ள எஸ் .ஏ.பி., ஐ.டி.,நிறுவனம் இந்தியாவில் பெங்களூரூ , மும்பை மற்றும் குருகிராம் பகுதிகளில் கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது. இதில் பெங்களூரூவில் இயங்கி வரும் கிளையில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு பேருக்கு எச்1என்1 வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கண்ட ஐ.டி.,நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:பெங்களூரூ கிளையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எச்1என்1 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மற்ற இரண்டு கிளைகளுக்கும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


latest tamil news


மேலும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று பிப்.,20 முதல் வரும் 22 ம் தேதி வரையில் அவர்களின் வீடுகளில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊழியர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனையையும் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அதன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21-பிப்-202011:57:38 IST Report Abuse
skv srinivasankrishnaveni இப்படி வரும் வைரல் காய்ச்சல்களை மறைச்சு ஏன்னா செய்யப்போறது அரசு இந்தியாலே சீனப்போல பற்காம்பு தெலு என்று விஷஜந்துக்களை திண்றவா 2%கூட இருக்காது கேரோணாவால் நான் வெஜ் கூட தூரத்துக்கு பயமா இருக்கு என்று திண்றவால்லாம் சொல்லுறாங்கய்யா அதேபோல இந்தவராசிகலாலெல்லாம் வயதுக்கே காரணம் டாஸ்மாக் தீர்த்தம் என்று சொல்லுறாளே உண்மையான ஐய்யா
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-பிப்-202020:20:05 IST Report Abuse
தமிழ்வேல் யம்மா, ஆல்கஹாலில் எதைப்போட்டாலும் ரொம்ப நாளைக்கு வீணா போகாது. அதனாலதான் டாஸ்மாக் தீர்த்தம் னு சொல்றீங்களோ.....
Rate this:
Share this comment
Cancel
Elamurugu -  ( Posted via: Dinamalar Android App )
20-பிப்-202020:31:50 IST Report Abuse
Elamurugu தமிழ் நாட்டிலும் நிறைய இருக்கு. அரசின் அடக்கு முறையால், மர்மக் காய்ச்சலாகவே பதிவாகிறது. அரசு எப்போது குடிமக்களின் நலனில் அக்கறை கொண்டது? அவர்களுக்குத் தேவை, மக்கள் சுபிட்சமாக இருப்பதாக காட்டிக் கொள்வது மட்டுமே. RIP
Rate this:
Share this comment
Cancel
20-பிப்-202020:31:36 IST Report Abuse
ஆப்பு கம்ப்யூட்டர் மூலமா வந்தா வைரசா இருக்கப்போவுது. நல்லா சோதனை செய்யுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X