தலித் இளைஞர்கள் சித்ரவதை: காங்., - பா.ஜ., வார்த்தை போர்

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
தலித், இளைஞர்கள் ,சித்ரவதை, காங்,  பாஜ,வார்த்தைபோர்

ஜெய்ப்பூர் :காங்., ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், கடையில் திருடியதாக இரண்டு தலித் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி, சித்ரவதை செய்தனர். இதற்கு, காங்., முன்னாள் தலைவர் ராகுல் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அதற்கு, 'இது காங்., ஆளும் மாநிலம்' என, பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது. ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது.
இங்குள்ள நாகோர் மாவட்டத்தில், ஒரு கடையில், 500 ரூபாய் திருடியதாக, இரண்டு தலித் இளைஞர்களை, கடை ஊழியர்கள் அடித்து உதைத்துள்ளனர்.அவர்களுடைய ஆடைகளை களைத்து, 'ஸ்குரூ டிரைவரால்' மர்ம உறுப்பை தாக்கி உள்ளனர்; மேலும், பெட்ரோல் ஊற்றிஉள்ளனர்.

இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது.'இது, மிகவும் கொடூரமான, வேதனை அளிக்கும் சம்பவம். சம்பந்தபட்டவர்கள் மீது, மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காங்., முன்னாள் தலைவர், ராகுல் கூறியுள்ளார்.இந்தப் பிரச்னை, தற்போது அரசியலாகிஉள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த அமித் மாளவியா, 'மாநில அரசு என, ராகுல் குறிப்பிட்டு உள்ளார். அங்கே மாநில முதல்வராக உள்ளவர், உள்துறை பொறுப்பையும் கவனிக்கிறார்.

அவருடைய பெயர் அசோக் கெலாட். ஒருவேளை நீங்கள் மறந்திருந்தால், நினைவுபடுத்த விரும்புகிறேன். ராஜஸ்தானில், காங்., அரசு அமைந்ததில் இருந்து, பெண்கள் மற்றும் தலித்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது' என, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு, மாநில முதல்வர் அசோக் கெலாட், 'தாக்குதல் தொடர்பாக, சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது. பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்' என, பதிவு செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-பிப்-202019:36:07 IST Report Abuse
நக்கல் மோடி இருக்கும்போது நம்மால் எங்கேயும் ஆட்சி அமைக்க முடியாது என்று இவர் உறுதியாக நம்புவதால் இப்படி அதிர்ச்சியை காட்டி இருக்கிறார்... தாங்கள் எந்த மாநிலத்திலும் ஆட்சில இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்... கொஞ்சம் தெளிய வெச்சு விஷயத்தை சொல்லணும்...
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
21-பிப்-202018:33:41 IST Report Abuse
Aarkay இஸ்லாமியருக்கு வீசிய ஓட்டு வலையில் catch எதுவும் சிக்கவில்லையா பப்பு பஃபூன்? இப்போது எங்கள் சுடலை போல ஜாதியை கையில் எடுத்துவிட்டாய்? இப்படி ஓட்டுப்பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவது கேவலமாயில்லை? அது சரி உனக்கு வேறென்ன தொழில் தெரியும்?
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-பிப்-202011:19:59 IST Report Abuse
Lion Drsekar மற்ற எல்லா இடங்களிலும் அமைதி , நாட்டில் கலவரம் ஏற்படுத்தி கொலை செய்து, ஆறுதல் கூற இப்படி ஒரு செயல்பாடு, இது போன்ற கட்சிகளால் நாட்டுக்கு என்ன பயன், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X