சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : பிப் 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன்: சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி. தமிழ், தமிழர்களால் மட்டும் பேசப்படும் மொழி. எனவே, தமிழைக் காட்டிலும், சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு, அதிக நிதி ஒதுக்கிஇருப்பதாகத் தெரிகிறது.

'டவுட்' தனபாலு: 'சமஸ்கிருதம், நாடு முழுவதும், ஹிந்துக்களின் வழிபாட்டுடன் தொடர்புடைய மொழி; ஹிந்துக்களின் புனித மொழி; பரவலாக பேசப்படா விட்டாலும், வழிபாட்டுடன் தொடர்புடைய மொழி' என, நீங்கள் சொல்லி இருக்க வேண்டும். அதை விட்டு, 'நாடு தழுவிய மொழி' என சொல்வது, சரியாக படவில்லை. நீங்கள் சொல்வதை, திராவிட கட்சிகள் பிடித்துக் கொண்டு, 'நாடு முழுவதும், சமஸ்கிருதம் எங்கு பேசப்படுகிறது?' என, கொக்கி போடுவர் என்பதில், 'டவுட்'டே இல்லை!



இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: பெண் குழந்தைகளுக்கு, முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதா ஆற்றிய சேவைகளை நினைவுகூரும் வகையில், அவர் பிறந்த, பிப்., 24ஐ, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக, தமிழக அரசு கொண்டாடும்.

'டவுட்' தனபாலு: பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்; அவர்கள் கவுரவமாக வாழ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில், ஜெ., பிறந்த நாளை, பெண் குழந்தைகள் நாளாக அறிவித்துள்ள நீங்கள், ஜெ., மரணத்தின் மர்ம முடிச்சுகளை இன்னும் அவிழ்க்கவில்லையே; பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் இல்லாத நிலையில், பாதுகாப்பற்ற முறையில் அவர் இறந்த விவகாரத்தை, நீங்கள் மறந்து விட்டீர்களோ என்ற, 'டவுட்'டை, உங்கள் அறிவிப்பு நினைவூட்டுகிறதே!


மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: மத்திய, பா.ஜ. அரசு எழுதி கொடுத்த வசனங்களை, முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் அப்படியே வாசிக்கிறார். குடியுரிமை திருத்த சட்டம், முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; ஹிந்துக்களுக்கும் எதிரானது. இந்த சட்டத்திற்கு எதிராக, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை, எங்கள் போராட்டம் தொடரும்.

'டவுட்' தனபாலு: முஸ்லிம்களின் ஒரு சாராரை, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துாண்டி விட்டு, நீங்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, ஹிந்துக்கள் மத்தியில் ஆதரவு இல்லை; கடும் எதிர்ப்பு நிலவுகிறது என்பதால் தான், 'அந்த சட்டம், ஹிந்துக்களுக்கும் எதிரானது' என, புதிதாக, 'கதை' விடுகிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. டில்லியில் நடத்த வேண்டிய போராட்டத்தை நீங்கள் எத்தனை நாள், தமிழகத்தில் நடத்தினாலும், எந்த தீர்வும் ஏற்படப் போவதில்லை என்பதில் மட்டும், டவுட்டே இல்லை!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-பிப்-202005:45:21 IST Report Abuse
D.Ambujavalli அம்மாவின் கேஸை ஆரம்பித்தவருடன் முதல்வரைக் கவர்னர் கை சேர்த்து வைத்ததுமே கேஸை முடித்தாயிற்றே இனி பொதுமக்களுக்குத் தெரிந்தால் என்ன, தெரியா விட்டால் என்ன? அவர் பேரில் ஒரு நாளைக் குறிப்பிட்டுவிட்டு கவுரவப்படுத்துகிறோமே, அது போதாதா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X