இதே நாளில் அன்று

Added : பிப் 20, 2020
Share
Advertisement
 இதே நாளில் அன்று

பிப்ரவரி 21, 1999 உலக தாய் மொழி தினம்:

வங்க மொழியை காக்க, உயிர் நீத்த மாணவர்களின் நினைவு தினமாக, பிப்., 21 கடைப்பிடிக்கப்படுகிறது. 1952ல், உருதுமொழியை அலுவல் மொழியாக, பாகிஸ்தான் அரசு அறிவித்தது. கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையாக வசித்த வங்காளிகள், 'வங்க மொழியையும் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்' என, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது, பாகிஸ்தான் அரசு, துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நான்கு பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமடைந்ததால், உருது மற்றும் வங்கம், அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டன. பாகிஸ்தானில் இருந்து, கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து, இந்தியா உதவியுடன், 1971ல், வங்கதேசம் என்ற, தனி நாடு உருவானது. ஐ.நா., அங்கீகாரத்துடன், 1999 முதல், ஒவ்வொரு ஆண்டும், பிப்., 21, உலக தாய்மொழி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.வங்க மொழி காக்க உயிர் நீத்த மாணவர்களின், நினைவை போற்றும் நாள் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X