அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வுக்கு பயம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (12+ 154)
Share
Advertisement
 அதிமுக,பயம்,ஸ்டாலின்,குற்றச்சாட்டு

சென்னை:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று அளித்த பேட்டி:குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, பல முறை, சபையில் கேள்வி எழுப்பினோம். தனி நபர் தீர்மானம் தந்தோம்; அது, ஆய்வில் உள்ளது எனக்கூறி தட்டிக் கழித்தனர். தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பையாவது, தடுத்து நிறுத்துங்கள் என, வலியுறுத்தினோம்.

ஆனால், முதல்வர் பதில் அளிக்காமல், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், பொதுக்கூட்டத்தில் பேசுவது போல பேசினார். ஓட்டு வங்கிக்காக, நாங்கள் அலைந்து கொண்டிருக்கிறோம் என்றார்.ஒரு வாதத்திற்கு, அதை ஏற்றாலும், நீங்கள் வக்காலத்து வாங்க என்ன காரணம்; ஆட்சி போய்விடும் என்று பயந்து, பா.ஜ.,வுக்கு அஞ்சி, வாய் பொத்தி நிற்கின்றனர்.

ஆட்சி போய்விட்டால், சிறைக்கு செல்ல நேரிடும் என, அஞ்சுகின்றனர்.ஏனெனில், இவர்களின் வண்டவாளங்கள் அனைத்தும், மத்திய அரசிடம் சிக்கியுள்ளன. அதற்கு பயந்து, அவர்கள் கூறுவதை எல்லாம் ஏற்றுக் கொள்கின்றனர். மக்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12+ 154)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-பிப்-202018:13:02 IST Report Abuse
R. SUBRAMANIAN ஐயா எதிர்கட்சி தலைவர் அவர்களே.இன்னும் பதினைந்து மாதங்கள் கழித்து நீங்கள் தான் தமிழக முதல்வர் என்று(உங்கள் உள்மனதில் உள்ள பயத்தை போக்கிக்கொள்வதற்காக)வீதி/மேடை தோறும் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.பிறகென்ன உங்கள் ஆட்சியில் மனம் போனபடி செய்யுங்களேன்.துணைக்கு அழகிரிகளும் கோபால்சாமிகளும் பக்கவாத்யம் வாசிக்க இருக்கிறார்களே.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-பிப்-202011:36:48 IST Report Abuse
Natarajan Ramanathan இவர் என்ன பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமாக நடக்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பைப்கூட எடுக்க கூடாது என்கிறாரே? இசுலாமியன் பெருகிவிட்டது தெரிந்துவிடும் என்று பயப்படுகிறாரா?
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
21-பிப்-202010:56:57 IST Report Abuse
C.Elumalai இந்தியாவில் பிறந்த இந்தியருக்காக, வக்காலத்து வாங்குகிறார், முதல்வர் எடப்பாடி. கள்ளரயிலேறி வந்து இந்தியனை சுரண்டி கொழுத்துப்போன, உங்க குடும்பமும், நீயும்,பங்களாதேசம், பர்மா, பாகிஸ்தான் மக்களின் வாக்குக்காக, வக்காலத்து வாங்குகிறாய் சுடலைகான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X