சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கன்டெய்னர் லாரி டிரைவர் தூங்கியதால் கோரம்

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (19+ 39)
Share
Advertisement

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே, கேரள அரசு பஸ் மீது, கன்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட கோர விபத்தில், 19 பேர் பரிதாபமாக இறந்தனர்; 24 பேர், படுகாயங்களுடன், மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அருகே, நள்ளிரவில், நேபாள பஸ்சும், சொகுசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானதில், ஏழு பேர் உயிரிழந்தனர்.latest tamil newsகர்நாடக மாநிலம், பெங்களூரு, மடிவாலாவில் இருந்து, 48 பயணியருடன், எர்ணாகுளம் நோக்கி, 'வால்வோ மல்டி ஆக்ஸில்' வகையைச் சேர்ந்த, கேரள மாநில அரசு பஸ், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு புறப்பட்டது.அதிகாலை, 3:15 மணியளவில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே, பைபாஸ் சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது, கேரள மாநிலம், கொச்சியிலிருந்து, சேலம் நோக்கி சென்ற, 'டைல்ஸ்' கற்கள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து, மையத் தடுப்பை தாண்டி, எதிரில் வந்த கேரள அரசுசிபஸ் மீது, பயங்கரமாக மோதியது.இதில், பஸ் உருகுலைந்தது. அதிகாலை என்பதாலும், மக்கள் நடமாட்டம் அதிகளவில் இல்லாத இடம் என்பதாலும், பஸ்சிற்குள் உயிருக்கு போராடியவர்களை உடனே மீட்க இயலவில்லை. அவ்வழியே வாகனங்களில் சென்றவர்கள், பஸ்சிற்குள் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.


தவலறிந்து, அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார், விபத்து நடந்த இடத்துக்கு சென்று, மீட்புப் பணிகளில் இறங்கினர்.அவிநாசி, திருப்பூர், பல்லடம், பெருமாநல்லுார் பகுதியிலிருந்து, '108' மற்றும் தனியார் என, 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்தன.விபத்து நடந்த இடத்திலேயே, நான்கு பெண்கள், எர்ணாகுளத்தைச் சேர்ந்த டிரைவர் கிரீஷ், 43, உட்பட, 19 பேர் உடல் நசுங்கி பலியாகினர். காயம் அடைந்த, 24 பேர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத் தும் பணி, காலை, 8:30 மணி வரை நீடித்தது. மீட்புப் பணியில், போலீசார், தீயணைப்பு துறையினர், திருமுருகன்பூண்டி பேரூராட்சி பணியாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.விபத்து காரணமாக, வாகனங்கள், அருகிலிலுள்ள சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன.


ஒருங்கிணைந்து பணிவிபத்தில் காயமடைந்த பயணியர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாலக்காடு கலெக்டருக்கு தகவல் அளிக்கப்பட்டது; அவரும், ஒரு குழு அனுப்பி வைப்பதாக கூறினார். உடனடியாக, அரசு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருவாய், போலீஸ், தீயணைப்பு துறையினர் ஒருங்கிணைந்து, துரிதமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜயகார்த்திகேயன்,திருப்பூர் கலெக்டர்


துாங்கிய லாரி டிரைவரால் நடந்த கோர விபத்து

போலீசார் கூறியதாவது:விபத்து நடந்த, இரு வழி பாதையில், ஒரு வழியில், மூன்று வாகனங்கள் செல்ல முடியும். கன்டெய்னர் லாரி டிரைவர் ஹேமந்த்ராஜ், துாக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியுள்ளார். அவரின் அஜாக்கிரதையான செயலால், மையத் தடுப்பை தாண்டி, வலது புற சாலைக்கு சென்றுள்ளது.இரு வாகனங்களும் அதிவேகத்தில் சென்றதால், உயிர்ச் சேதம் அதிகமாகி விட்டது. வேகம் அதிகமாக இருந்ததால், தடுப்புச்சுவரில் லாரி மோதியதில், கன்டெய்னர் லாரியின் டயர் வெடித்தது. அதன் பின் தான், பஸ் மீது மோதியுள்ளது. இவ்வாறு, போலீசார் கூறினர்.


பிரேத பரிசோதனைவிபத்தில் பலியானவர்களின் சடலங்கள், அவிநாசி அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டன. ஆனால் அங்கு, ஒரு சடலம் கூட பிரேத பரிசோதனை செய்யப்படாமல், திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவிநாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ரமணன் கூறுகையில், ''பிரேத பரிசோதனை செய்ய, டாக்டர்கள், ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர். பிரேத பரிசோதனை அறையில், ஒரே நேரத்தில், இரண்டு சடலங்களை மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய முடியும். இறந்தவர்கள், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அதிகளவு வி.ஐ.பி.,க்கள் வந்து போவர் என்பதாலும், சடலங்கள், திருப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன,'' என்றார்.


மீட்பு பணியில் 200 போலீசார்

விபத்து சம்பவம் குறித்து அறிந்து, மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. விபத்து நடந்த இடத்திற்கு, கமிஷனர் சஞ்சய் குமார், எஸ்.பி., திஷா மிட்டல், துணை கமிஷனர் பத்ரி நாராயணன், நான்கு உதவி கமிஷனர்கள், இரண்டு டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து போலீசார் என, 200 பேர் வந்து, மீட்புப் பணி, போக்குவரத்து சீரமைப்பு உட்பட பணிகளில் ஈடுபட்டனர்.


போக்குவரத்துபாதிப்பு* பஸ் டிரைவர் பைஜுவின், உடல், கன்டெய்னர் லாரியில் சிக்கியது. இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின், அவரது உடல் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது
* விபத்தில் உயிரிழந்த, 19 பேரின் உடல்கள், அவிநாசி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்குள்ள பிரேத பரிசோதனைக் கூடத்தில், இட வசதி குறைவாக இருந்ததால், எட்டு சடலங்கள் மட்டுமே உள்ளே வைக்கப்பட்டன. 11 சடலங்கள், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன
* விபத்துக்குள்ளான பஸ், 'கிரேன்' உதவியுடன் எடுத்து செல்லப்பட்டது. கன்டெய்னர் லாரி, மூன்று கிரேன்கள் பயன்படுத்தி, இழுத்து செல்லப்பட்டது
* தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட போக்குவரத்து, ஒன்பது மணி நேரத்துக்கு பின் சீரானது

* பயணியரின் உயிரை பறித்த கன்டெய்னர் லாரி, செல்லப்பிராணிகளின் உயிரையும் விடவில்லை. பஸ்சில் பயணம் செய்த ஒருவர், இரண்டு நாய் குட்டி மற்றும் பூனையை எடுத்து வந்தார். பயணியரோடு, அவையும் இறந்தன.


இறந்தவர்கள் குடும்பத்துக்குகேரள அரசு ரூ. 10 லட்சம்அவிநாசி பஸ் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாலக்காடு மாவட்ட கலெக்டர் பாலமுரளி, எஸ்.பி. சிவவிக்ரம், கேரள வேளாண்துறை அமைச்சர் சுனில்குமார், போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரன், எம்.பி.க்கள் ஸ்ரீகண்டன், ரம்யா ஹரிதாஸ் உள்ளிட்டோர் விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டனர். அதன்பின் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு விரைந்தனர்.

கேரள போக்குவரத்து துறை அமைச்சர் சுசீந்திரன் கூறுகையில் ''விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும். பலியான டிரைவர்கள் இருவரின் குடும்பத்துக்கு தலா 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்'' என்றார்.கேரள மாநில வேளாண்துறை அமைச்சர் சுனில்குமார் கூறுகையில் ''படுகாயமடைந்தவர்களுக்கான மருத்துவ செலவை கேரள அரசு ஏற்கும். விபத்து நடந்த தகவல் கிடைத்ததும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி நடப்பதால் அதிகப்படியான உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தேவையான ஆம்புலன்ஸ் வசதிகளை செய்து கொடுத்துள்ளது. கேரளாவில் இருந்தும் 27 ஆம்புலன்ஸ்கள் திருப்பூருக்கு வந்துள்ளன'' என்றார்.


விபத்துக்கு காரணம் டிரைவர் மட்டுமா

நள்ளிரவு தாண்டி அதிகாலை வரையிலான நேரம் டிரைவர்களை அசதிக்குள்ளாக்கும் தருணம். இதனால் தன்னையறியாமல் டிரைவர் துாங்கி விடுவதுண்டு. இதனால் சுங்கசாவடி அல்லது உகந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுத்து டீ உள்ளிட்ட பானங்களை அருந்தி சோர்வு நீங்கிய பின் வாகனங்களை மீண்டும் இயக்க வேண்டும் என டிரைவருக்களுக்கு
அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதை டிரைவர்களும் பின்பற்றுவதில்லை; வாகன
உரிமையாளர்களும் அறிவுறுத்துவதில்லை.

நேற்று கோர விபத்து நேர்ந்தபோது நேரம் அதிகாலை 3:30 மணி. உயிர்களைப் பலிவாங்கிய
கன்டெய்னர் லாரி கொச்சியில் இருந்து புறப்பட்டிருக்கிறது. பெங்களூருவுக்கு வேகமாகச்
செல்லும் எண்ணத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் ஹேமராஜ் ஓய்வின்றி இயக்கியுள்ளார்.
விபத்துக்கு காரணமான டிரைவர் மீது விபத்து என்று சாதாரணப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

டிரைவர் மட்டுமல்லாது கன்டெய்னர் லாரியின் உரிமையாளர் மீதும் வழக்கு பாய வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற கோர விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (19+ 39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு. கூடுவாஞ்சேரி விபத்தை தவிர்ப்பதற்கு ஆயிரம் யோசனைகள் சொன்னாலும் வண்டி ஓட்டுநர் சில வினாடிகள் தூங்கிவிட்டால் விபத்துக்கள் தவிர்க்க முடியாது. வாகனம் ஓட்டுபவர்கள் தங்களது இயலாமையை உணர்வு தூக்கிவிடுவோம் வருகிறது என்று தெரிந்தால் உடனை வண்டி ஓட்டுவதை நிறுத்தி ஓய்வு எடுக்க வேண்டும். இல்லையேல் விபத்து நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
21-பிப்-202016:02:51 IST Report Abuse
dandy இந்த வீதிகளில் மொத்தம் எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன ?
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
21-பிப்-202014:00:52 IST Report Abuse
Sathish கேரளாவில் வாளையார் முதல் பாலக்காடு வரை தேசிய நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாடு கேமிராக்கள் உள்ளது அவை நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட அதிகமாக செல்லும் வாகனங்களை உடனே போட்டோ எடுத்து அதன் உரிமையாளர் முகவரிக்கு அபராதம் RTO மூலம் அனுப்பப்படுகிறது. அதில் தப்பவே முடியாது. ஒவ்வொரு கேமிராவும் தனித்தினியே இயங்குவதால் ஒவ்வொன்றும் தனித்தனியே அபராதம் விதிக்கக்கூடியவை. எனது கேரள நண்பர் ஒருவர் கல்யாண வேலையாக சென்றவர் வேகக்கட்டுப்பாட்டு கேமெராவை பொருட்படுத்தாது தனது காரை இயக்கி மொத்த அபராதமாக எட்டாயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். இது இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் இதுபோல் கட்டுப்பாடுகள் வரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X