அரசியல் செய்தி

தமிழ்நாடு

காத்திருந்த விவசாயிகளை காக்க வந்த சட்டம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம் ; தேர்வு குழுவுக்கு அனுப்ப தி.மு.க., வலியுறுத்தல்

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
விவசாயிகளை, சட்டம்,தேர்வுகுழு, திமுக, வலியுறுத்தல்

சென்னை :''விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

சட்டசபையில், நேற்று காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்கும் சட்ட மசோதா மீது நடந்த விவாதம்:


டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றும் மசோதாவை மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபையில் தாக்கல் செய்தார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்:டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்குவது குறித்து, 10ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு, முதல்வர் கடிதம் எழுதினார்; அதற்கு, என்ன பதில் கிடைத்தது.ஏற்கனவே அங்கு, 341க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுக்கு, மாநில அரசு அனுமதி வழங்கும் வகையில், இந்த சட்டம் அமைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

துறைமுகம், சாலை, தொலைதொடர்பு, எரிசக்தி, குடிநீர் உள்ளிட்ட பணிகளை, இந்த சட்டம் கட்டுப்படுத்தாது என, கூறப்பட்டு உள்ளது.சட்டத்தின்படி அமைக்கப்படும், மாநில அளவிலான குழுவில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு இடம் வழங்கவில்லை. சட்டத்தில், திருச்சி, கரூர், அரியலுார் மாவட்டங்கள் விடுபட்டுள்ளன. வேளாண் நிலங்களை, ரியல் எஸ்டேட்களாக மாற்றுவதற்கு தடை விதிக்கவில்லை.

இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு முன், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக, முதல்வர் கூறினார்; அவ்வாறு செய்ததாக தெரியவில்லை. விவசாயிகளுக்கு முழு பாதுகாப்பு தரும் வகையில், சிறப்பான சட்டத்தை இயற்ற வேண்டும். எனவே, மசோதாவை, சபையின் தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும்.


சட்டசபை காங்., தலைவர் ராமசாமி:இந்தச் சட்டப்படி, புதிதாக ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை, எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு, சரியான தகவல்களை கூறியுள்ளீர்கள். ஆனால், அதற்கு முன்பாக அமைக்கப்பட்ட, 'ஹைட்ரோ கார்பன்' மற்றும் பெட்ரோலிய கிணறுகளை, எப்படி கையாள்வது என்பதை சரியாக தெரிவிக்கவில்லை. இதை பார்க்கும்போது, பழைய திட்டங்களை, அப்படியே செயல்படுத்த அங்கீகாரம் தருவது போல உள்ளது.

எனவே, இந்த பிரச்னையை, தேர்வு குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு குழுவில் விவாதம் செய்து, முடிவெடுக்க வேண்டும்.


முதல்வர்:டெல்டா மாவட்டங்களில், கிணறு வாயிலாக பாசனம் நடக்கிறது. எனவே, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களால், வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படும். கடல் நீர் உட்புகும் பிரச்னை அதிகரிக்கும். சதுப்பு நில காடுகளும் பாதிக்கப்படும். டெல்டாவில் உள்ள பாரம்பரிய சின்னங்களும் பாதிக்கப்படும். அவற்றை கருதி, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இது தொடர்பாக, மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். 'ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு, தமிழக அரசே முடிவெடுத்து கொள்ளலாம்' என, மத்திய அமைச்சர் பதில் அனுப்பியுள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால், மக்களை திசை திருப்ப சிலர் முயற்சிக்கின்றனர்; அவர்கள் எண்ணம் ஈடேறாது. ரத்தம் சிந்தி, உழைக்கும் விவசாயிகள், தங்கள் சொந்த நிலத்தை விற்கக்கூடாது என்று, கூறுவது தவறு. அது, விவசாயிகளை பாதிக்கும். இது, பாதுகாப்பான சட்டம்; யாரும் அச்சப்பட தேவையில்லை.


ஸ்டாலின்:இந்த சட்டத்தை, தி.மு.க., மனப்பூர்வமாக வரவேற்கிறது. இதை, மத்திய அரசிடம் வலியுறுத்தி, தி.மு.க., - எம்.பி.,க்கள், பார்லிமென்டில் பேசுவர். சட்டத்தில் இருக்கக்கூடிய பிரச்னைகளை சுட்டிக்காட்டினேன். முதல்வர், சில விளக்கங்களை கூறியுள்ளார். இருப்பினும், மசோதாவை தேர்வு குழுவிற்கு அனுப்பினால் தான், அதில் விவாதித்து, சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும்.


தி.மு.க., - தங்கம் தென்னரசு:சட்டத்தில், 'பெட்ரோலிய கெமிக்கல்' நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பதற்கு, தெளிவான விளக்கம் இல்லை. பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள், பெட்ரோலிய பொருட்களை தயாரிக்க வரும். பெட்ரோலிய கெமிக்கல் பொருட்கள் உற்பத்தியால், சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபடும். இந்த நிறுவனங்கள் வந்தால், அது, வேளாண் மண்டலத்தை பாதிக்கும்.எனவே, இந்த சட்டம், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களை, எப்படி தடுக்கப் போகிறது என்பதை, தெளிவுப்படுத்த வேண்டும்.


சட்ட அமைச்சர் சண்முகம்:அரியலுார், கனிமவளங்கள் நிறைந்த மாவட்டம்; கரூர், தொழிற்சாலைகள் நிறைந்த, அன்னிய செலாவணியை ஈட்டி தரும் மாவட்டம். தமிழகம் விவசாயத்திற்கு மட்டுமல்ல, நாட்டின், இரண்டாவது பொருளாதார மண்டலமாகவும் உள்ளது. இங்கு, விவசாயம் ஒரு கண் என்றால், தொழிற்சாலைகள், இன்னொரு கண்.அப்போது தான், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும். விவசாயத்தை பாதுகாப்பதற்கு, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இங்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு, மாநில அளவிலான குழு அமைக்கப்படும். மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த திட்டத்தை குழு நிராகரிக்கும் வகையில், சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு, முதல்வர், 10ம் தேதி கடிதம் எழுதினார். அதற்கு, மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். தி.மு.க., 18 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை, முதல்வர், 10 நாளில் சாதித்து காட்டியுள்ளார்.

தி.மு.க., மத்திய அமைச்சரவையில் இருந்து சாதிக்க முடியாததை, ஒரு கடிதம் வாயிலாக, முதல்வர் சாதித்துள்ளார். டெல்டாவை பாதுகாப்பதற்கு, நமக்கு ஒரு சட்டம் தேவை. ஒரு சட்டம் இருந்தால் தான், அதில் திருத்தம் செய்ய முடியும். இதற்காகவே, இந்த சட்டம்.


எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:நாங்கள் சட்டத்தை எதிர்க்கவில்லை. உங்களுக்கு உள்ள அதே உணர்வு, எங்களுக்கும் உள்ளது. விவசாயிகள், வல்லுனர்களை அழைத்து, கருத்து கேட்பதற்கு, தேர்வு குழுவிற்கு அனுப்பலாம். தேர்வு குழுவிற்கு,ஒரு மாதம், மூன்று மாதம் நேரம் கொடுத்து முடிக்கும்படி கூறலாம். அதன் பின், சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த கருத்தை அரசு ஏற்காததால், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.


முதல்வர்:இது, விவசாயிகள் வாழ்வாதார பிரச்னை. விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில், சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டத்தில் உள்ள புள்ளிவிவரங்களை, நானும், சட்ட அமைச்சரும் எடுத்துரைத்தோம். இந்த சட்டம், விவசாயிகளை பாதுகாக்கும். எனவே, தவறான செய்தியை பரப்ப வேண்டாம்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
23-பிப்-202022:05:52 IST Report Abuse
பஞ்ச்மணி சரி விலை நிலங்களை காப்பாத்திட்டீங்க அப்பாடா கொஞ்சம் மூச்சு விடலாம் அப்பாலே விவசாயம் செய்யறதுக்கு நாங்க ரெடி அதுக்கு உயிர் மூச்சான தண்ணிக்கு எதாவது வழி வெச்சு இருக்கீங்களா இல்லகாட்டி வயக்கம் போல தஞ்சை முப்போகம் விளைஞ்ச ஊரு அங்க யானை கட்டி போரடிச்சானுவோ அப்படின்னு பழைய மெட்ட பாடிட்டு போய்டுவீங்களா (ஆனா அப்படி பழைய பாட்டை தான் நம்ப டுமிலன்ஸ் கேட்க விரும்புறேன் அது நிறைய உதாரணம் இருக்கு இப்போ சமீபத்திய பெரிய கோயில் அது தொடர்பான சர்ச்சை) இஸ்ரேல் ஒரு பாலைவன நாடு இங்க ஒரு சொட்டு நல்ல தண்ணிய வீணடிக்காம நல்ல வளமான விவயசம் பன்றான் அதுபோல ஐரோப்பிய நாடுகள் மழை கம்மி ஆனா நல்ல செழிப்பான விவசாயம் ஹ்ம்ம்ம் இப்படி பழைய கதையா பேசி பேசியே நாம மோசம் போனது தான் மிச்சம்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-பிப்-202008:30:11 IST Report Abuse
ஆரூர் ரங் அயோக்கியத்தனமான ஒரு திட்டம். அவரவர் என்ன சாப்பிடவேண்டும் எனபதை அவரவர்தான் முடிவு செய்யவேண்டும் என்று கூறுவோர் ஒரு நில உரிமையாளர் தனது நிலத்தில் என்ன தொழில் செய்யவேண்டும் என்பதை அவரே முடிவு செய்யவிடவேண்டும் .ஆலையமைக்காதே ONGCக்குகொடுக்காதே வீடு கட்டாதே என உத்தரவிட அரசியல்வாதிகளுக்கு என்ன உரிமை? அந்த சுதந்திரம் நிலம் வைத்திருப்பவனுக்குத்தான் வேண்டும் 1967க்குப்பிறகு டெல்ட்டாவில் ஒட்டுரக நெல் கரும்பை அறிமுகம் செய்தது திமுக அரசுதான். அதோடு கூடுதல் ரசாயன உரம் பூச்சிமருந்து அந்த ஒட்டுரக பயிர்களுக்குத் தேவைப்பட்டதால் நிலமே நாசமாகிவிட்டது .மேலும் கர்நாடக ரசாயன நுரை, நொய்யலில் விடப்படும் ஜவுளி சாய நீர் ஆகியவையும் நிலவளத்துக்கு அடியோடு வேட்டு வைத்துவிட்டன .அவற்றை நிறுத்த எந்த முயற்சியுமில்லை போர்வெல் நீரால் விவசாய நிலங்களில் உப்பு படிந்துவிட்டது.ஒட்டுரகத்தால் அதிக நீர்தேவை ஏற்பட்டு கர்நாடகத்தோடு நீருக்கு சண்டை நீரே கிடைக்காத நிலைமை .இருக்கும் குளம்குட்டை வாய்க்கால்களை திரவிஷர்கள் ஆக்கிரமித்து பிளாட் போட்டுவிட்டார்கள். பாலு போன்றவர்கள் விவசாயத்தொழிலாளர் நலனு(??)க்காக சாராய ஆலைகூட கட்டிவிட்டார்கள் .இப்போது விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை ஆள்கிடைக்காமல் நன்கு விளைந்த பல்லாயிரம் ஏக்கர் நெற்பயிர் மூழ்கிவிட்டது.இருக்கும் விவசாயிகளும் தங்கள் பிள்ளைகளை வேறு தொழில்களுக்கு வெளியூர் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஆளைவிடுடா என நிலத்தை விற்றுவிட்டு ஓடவே முக்கால்வாசி விவசாயிகள் தயாராகிவிட்டனர் . இப்போது அவர்கள் கச்சாஎண்ணெய் எடுக்கக்கூட நிலங்களைக் கொடுக்கக்கூடாது என்று சட்டம்போடுவது அவர்கள் வயிற்றிலடிக்கும் வேலை .டெல்டாகாரன் என்றும் நாடாளக்கூடாது என பல நாளாக ஒரு நினைப்பு இருக்கிறது .இப்போது அவன் வாழவும் கூடாது என அரசியல்வியாதிகள் நினைத்து திட்டம் கொண்டுவருகின்றனர். பொறுத்தது போதும் இனியும் டெல்டா விவசாயி தியாகியாகவே இருக்கமாட்டான்
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-பிப்-202005:00:06 IST Report Abuse
Mani . V அப்படியே இயற்கை வளங்களை, விவசாயத்தை அழித்தொழிக்கும் சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைக்கும் தீர்மானம் நிறைவேற்றினால் நன்றாக இருக்கும். (எது அது சம்பந்திக்கானதா? முடியாதா? அப்ப சரி)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X