போராட்டக்காரர்களுடன் இரண்டாம் நாள் பேச்சு

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 20, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
#போராட்டக்காரர்கள், இரண்டாம், நாள் பேச்சு

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்துவோருடன், உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள சமரச குழுவினர், நேற்று இரண்டாம் நாளாக பேச்சு நடத்தினர்.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது.இங்குள்ள ஷாஹீன் பாக் பகுதியில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடந்து வருகிறது.


latest tamil newsஇதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் சிலர் பொது நலன் வழக்கை தொடர்ந்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த, மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய இருவர் குழுவை அமைத்தது. இக்குழு, போராட்டக்காரர்களுடன், இரண்டாம் நாளாக பேச்சு நடத்தியது.அப்போது, செய்தியாளர்கள் முன்னிலையில் பேச சாதனா ராமச்சந்திரன் மறுத்து விட்டார். அதற்கு, போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில், செய்தியாளர்கள் வெளியேறியபின், அவர் பேசியதாவது:
இந்தியாவில், ஷாஹீன் பாக், போராட்டத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. அதேசமயம், பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத போராட்டம் என்ற பெயரையும் எடுக்க வேண்டும். இடம் மாறினால், போராட்டம் வலுவிழக்கும் என, கருத வேண்டாம். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை, பிரதமர் மோடி உட்பட, நாடே கேட்டுக் கொண்டிருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.முதியவர் ஒருவர், 'தனக்குப் பின்னால், தன் குழந்தைகள் எப்படி இங்கு வாழ முடியும் என கவலையாக உள்ளது' என்றார். ஒருவர், 'என் சைக்கிளில் தேசியக் கொடி உள்ளது. நான் இந்தியாவை நேசிக்கிறேன். என்னை தேசத் துரோகி என கூற வேண்டாம்' என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AMERICAN THE GREAT👍 - Khobar,சவுதி அரேபியா
21-பிப்-202012:21:23 IST Report Abuse
AMERICAN THE GREAT👍 எப்படி கள்ளத்தனமாக வந்தியோ அப்புடிய ஓடி போய்டு. வேற ஒன்னும் செய்ய முடியாது இனிமேல்
Rate this:
Share this comment
Cancel
??????? - Thiruvaiyaru,இந்தியா
21-பிப்-202009:53:37 IST Report Abuse
??????? போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் போராடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
21-பிப்-202008:50:55 IST Report Abuse
a natanasabapathy Poraatta kaararkallin kaalil vizhuvom aanaal parliament niraiverttiya theermaanathai yethirpporai onrum seyya maattom ithaigaiya jananaayagam thevaiyaa. Vaazhka neethimaankal. Poraattathinaal aayirakkanakkaana viyaapaarikallum pothu makkalum paathikka padukinranare athu neethi arasarkalukku theriyavillaiyaa sattathai mathikkaathavarkalidam pechuvaarthai thevaiyaa ithu martavarkalukku munnuthaaram aakividum kandavanum saakaiyil iranki poraada vasathi yaaki vidum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X