அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,தலைவர் டில்லிக்கு நேரில் வராமல் போனது ஏன் ?

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (62)
Share
Advertisement
 தி.மு.க., தலைவர்# டில்லி, நேரில் வராமல் போனது ஏன்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்துக்களை, தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் நேரில் வந்து அளிக்க முடியாமல், 10 எம்.பி.,க்களை மூலமாக, ஜனாதிபதியை சந்தித்துத் தந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தி.மு.க., கையெழுத்து இயக்கத்தை துவக்கி. 2 கோடிக்கும் அதிகமான பேரிடம் கையெழுத்துக்களை பெற்றது. அவற்றை,ஸ்டாலின் தலைமையில், ஜனாதிபதியை சந்தித்து, குடியுரிமைச்சட்டத்திற்கு எதிரான தமிழக மக்களின் உணர்வுகளை, பெரிய அளவில் வெளிப்படுத்துவது என, திட்டமிடப்பட்டது.


latest tamil news


இதற்காக, நேரம் ஒதுக்கித் தரும்படி, சில வாரங்களுக்கு முன்பேயே, ஜனாதிபதி மாளிகையில் தி.மு.க., சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், ‛ ஜனாதிபதிக்கு, நிறைய அலுவல்கள் உள்ளன; பிப்ரவரி 19 ம் தேதி மட்டுமே அவரை சந்திக்க முடியும்; அதையும் உறுதிப்படுத்தாத வரையில் எதுவும் நிச்சயமில்லை' என, தி.மு.க.,வுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. இதனால், ஸ்டாலின் டில்லிக்கு வருவது தொடர்பாக, குழப்பமும், கடைசி நேர பதற்றமும் தொற்றிக் கொண்டது. கடைசியில், ஸ்டாலினுக்கு நேரம் தரப்படமாட்டாது என்பதை உறுதி செய்த பின், மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, தி.மு.க., எம்.பி.,க்களை, உடனடியாக, டில்லிக்கு கிளம்பிச் செல்ல உத்தரவிடப்பட்டது.
இருந்தும், எம்.பி.,க்களுக்கும், கடைசி நேரத்தில்தான், ஜனாதிபதி மாளிகையிலிருந்து நேரம் உறுதிப்படுத்தப்பட்டது. இதுபோன்ற சந்திப்புகளில், அனைத்து எம்.பி.,க்களுமே பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்த சந்திப்பில், வெறும் 10 பேர் மட்டுமே பங்கேற்றதற்கு, கடைசி நேரம் வரையிலான, 'சஸ்பென்சே' காரணம். - நமது டில்லி நிருபர்


Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
21-பிப்-202020:06:50 IST Report Abuse
Nallavan Nallavan மூத்த குடி (அதாங்க நம்ம தமிழ்ச் சமுதாயம்) ஆசியோடு, கடமையோடு போட்டுக்கொடுத்த கையெழுத்தெல்லாம் காமடியில முடிஞ்சு போச்சா ????
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-பிப்-202011:02:13 IST Report Abuse
Malick Rajaகாமாலை கண்ணிற்கு அனைத்துமே மஞ்சளாக தெரியும் ..உரிய முறையில் சிகிச்சை பெற்றபின் சரியான நிறம் தெரியவரும்...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-பிப்-202017:22:28 IST Report Abuse
Natarajan Ramanathan RAMAKRISHNAN NATESAN SIRUSERI - CHENNAI தவறான தகவல் பதியக்கூடாது. அப்படி எந்த ஒரு சம்பவமும் நடக்கவே இல்லை. ஒரு தலித் ஜனாதிபதி ஆக்கியதே பிஜேபி. அதைமறந்து பொய்தகவல் பதியவேண்டாம்
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
24-பிப்-202013:35:02 IST Report Abuse
madhavan rajanசுடலை ரொம்ப பிசி.. அவரால் நேரம் ஒதுக்கமுடியவில்லை. அதனால் அவர் அனுப்பிய ஆட்களிடம் ஜனாதிபதி மனுவை பெற்று திமுகவுக்கு நன்றிக்கடன் செலுத்திவிட்டார்....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-பிப்-202017:19:39 IST Report Abuse
Endrum Indian இரண்டு கோடி மக்கள் எப்படி கையெழுத்து போட்டார்கள்????போற போக்கில் அய்யா நீங்கள் கையெழுத்து போடுங்க ??? எதுக்கு?? சும்மா போடுங்க?? இதை ஜனாதிபதிக்கு கொடுக்கணும்??? நிச்சயமாக நிச்சயமாக?? அப்போ சரி, நீங்க கையெழுத்து போட்டுட்டு இந்த டோக்கனை வாங்கிக்குங்க, அந்த ஹோட்டலில் இந்த டோக்கனை காண்பித்தால் ஒரு புல் மீல்ஸ் கிடைக்கும்??? அப்போ கொடுங்க நான் கையெழுத்து போடறேன்????????. சார் இவ்வளவு கையெழுத்து வாங்கி கொடுத்து விட்டேன், ஓகே அங்கே போய் இந்த பேப்பரை கொடு ஒனக்கு என்ன கொடுக்கணுமோ அங்கே உனக்கு கிடைக்கும்??? ஓகே சார்??? இது தான் இரண்டு கோடி கையெழுத்து சமாச்சாரம்????
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-பிப்-202011:03:52 IST Report Abuse
Malick Rajaஇவர் சார்ந்தோர் கூட்டம் மட்டும் இதை நம்பியே ஆகவேண்டும் அதுதான் உண்மை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X