பொது செய்தி

இந்தியா

16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Army,women,IndianArmy,command_role,பெண்கள்,ராணுவம்,ராணுவபடை

புதுடில்லி: உலகளவில் 16 நாடுகளின் ராணுவத்தில் பெண்கள் உயர் பதவி அல்லது போர்ப் படையில் உள்ளனர்.

'ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைத்து உயர்பதவி வழங்க வேண்டும்; போர் முனைக்கு பெண்களை அனுப்புவது குறித்து அரசு கொள்கை ரீதியில் முடிவெடுக்கலாம்' என உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. இந்நிலையில் உலகில் 16 நாடுகளின் ராணுவத்தில் பெண்கள் உயர் பதவி அல்லது போர்ப் படையில் உள்ளனர்.


latest tamil news



அமெரிக்காவின் விமானம் மற்றும் கடற்படை பிரிவுகள் 1990களின் துவக்கத்தில் இருந்து போர் முனையில் வீராங்கனைகளை ஈடுபடுத்தி வருகின்றன. சீனாவில் 14 லட்சம் ராணுவத்தினரில் 53 ஆயிரம் பெண் உயர் அதிகாரிகள் உள்ளனர். இந்தியா, பாகிஸ்தானில் 3,400 பெண் அதிகாரிகள் உள்ளனர்.

இஸ்ரேல் 1985ல் பெண்களை போர் படைப் பிரிவில் சேர்க்கத் துவங்கியது. இதை டென்மார்க் 1988லும் கனடா 1989லும் பின்பற்றின. வட அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பு நாடுகளில் முதன் முதலாக நார்வே 1980களில் பெண்களை முப்படைகளின் முன்னணி பதவிகளுக்கு நியமித்தது.


latest tamil news



இந்திய ராணுவத்தில் ஒரு சில பிரிவுகளை தவிர இதர பிரிவுகளில் பெண்களை நியமிப்பதற்கான தடை 1992ல் நீக்கப்பட்டது. அந்தாண்டில் முதன் முதலாக ராணுவத்தின் ஐந்து பிரிவுகளில் பெண்கள் சேர்க்கப்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்த மூன்று மாதங்களில் பெண்களுக்கு நிரந்தர ஆணையம் அமைக்கப்பட உள்ளது. அதன் கீழ் குறுகிய கால ஆணையத்தின் கீழ் இருக்கும் அனைத்து பெண் அதிகாரிகளும் கொண்டு வரப்பட உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
22-பிப்-202015:43:29 IST Report Abuse
S.P. Barucha தகுதியான , திறமையான , நன்கு பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். கண்டிப்பாக இட ஒதுக்கீடு கூடவே கூடாது.
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
21-பிப்-202017:16:07 IST Report Abuse
mrsethuraman  பெண்களுக்குத்தான் சண்டை என்றால் எப்போதும் பிடிக்குமே ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X