தூக்கமின்மையால் அவதிப்படும் பெண்களுக்கு..

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
sleep,women,heart_problem,பெண்கள்,தூக்கம்,அவதி

நியூயார்க்: துாக்கமின்மையால் அவதிப்படும் பெண்கள், அதிகமாக சாப்பிடுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு இருதய பாதிப்பு, சர்க்கரை நோய் ஏற்படலாம்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலை., துாக்கமின்மை தொடர்பாக ஆய்வு நடத்தியது. குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது, 'மெனோபாஸ்' பாதிப்பு என பல பிரச்னைகளை சந்திப்பதால், பெண்களின் துாக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர். 20-76 வயதுள்ள 500 பெண்களை தேர்வு செய்தனர். இவர்களது துாங்கும் நேரம், உணவு பழக்கம் கணக்கிடப்பட்டது. இரவில் துாங்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்பவர்கள் ஒவ்வொரு நாளும் அதிக 'கலோரி' உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது ஆய்வில் கண்டறியப்பட்டது.


latest tamil newsஇரவில் நன்றாக துாங்கும் பெண்களுடன் ஒப்பிடுகையில், சரியாக துாங்காத பெண்கள் 143 'கலோரி' மற்றும் 100 கிராம் உணவை தினமும் அதிகமாக எடுத்துக் கொண்டனர். 1000 'கலோரி'க்கு 4 கிராம் கூடுதலாக சர்க்கரை சேர்த்தனர். மாவுச் சத்துள்ள உணவு, இனிப்பு பொருட்களை அதிகம் உட்கொண்டனர். இதனால், உடல் பருமன் அதிகரித்து 'டைப்-2' சர்க்கரை நோய், இருதய பாதிப்பு ஏற்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆய்வுக் குழுவில் இடம் பெற்ற டாக்டர் புரூக் கூறுகையில், 'அதிகமான பொறுப்புகள் காரணமாக பெண்களின் துாக்கம் பாதிக்கப்படுகிறது. இரவில் சரியான துாக்கம் இல்லாததால், அதிகமாக சாப்பிடுகின்றனர். ஆரோக்கியம் இல்லாத உணவுகளை எடுப்பதால், ஆயுள் குறைகிறது' என்றார்.

டாக்டர் பாரிஸ் ஜூரைகாட் கூறுகையில், 'துாக்கமின்மையால் உணவு உட்கொள்ளும் முறை தொடர்பாக மூளையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. வயிறு நிரம்பாதது போல் உணர்கின்றனர். அதிகம் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான பிரச்னை, மனஅழுத்தம் ஏற்படுகிறது. குறைவான துாக்கம் 'டி.என்.ஏ., அமைப்பில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி 'கேன்சர்' நோய்க்கும் வழிவகுக்கிறது. இரவில் நன்கு துாங்கினால் மட்டுமே நோய்களின் பிடியில் இருந்து பெண்கள் தப்ப முடியும்' எனக் கூறினார்.


latest tamil news
எத்தனை மணி நேரம்:


* சராசரியாக அனைவரும் இரவில் 7-8 மணி நேரம் தூங்கவேண்டும். 64 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 7- 9 மணி நேரம், குழந்தைகள் 9-10 மணி நேரம் தூங்கலாம்.
* தினமும் ஒரே நேரத்தில் துாங்கச் செல்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்
* படுக்கை அறை துாங்குவதற்கு மட்டுமே. அங்கு 'டிவி' பார்ப்பது, உணவு உண்பது, அலைபேசியில் அலை பாய்வது கூடாது.
* துாங்குவதற்கு முன் காபி தவிர்க்கவும்.
* மூளைக்கு வேலை கொடுக்க கூடாது.
* நீண்ட நாட்களாக துாக்கமின்மையால் அவதிப்பட்டால், டாக்டரை ஆலோசிக்கவும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manis - doha,கத்தார்
22-பிப்-202009:23:09 IST Report Abuse
manis யாருயாது நயனோட போட்டோவை போட்டது ..
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
21-பிப்-202007:39:00 IST Report Abuse
சீனி நிம்மதியான தூக்கத்திற்க்கு, மனைவிக்கு தேவை நல்ல கணவன், கணவனுக்கு தேவை நல்ல மனைவி.... :)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X