ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
walking,weight_loss,Exercise,வாக்கிங்,உடல்எடை,குறைப்பு

வாஷிங்டன்: தினமும் 10,000 அடி நடந்தாலும், உடல் எடை அதிகரிப்பை தடுக்க இயலாது என அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் உள்ளது பிரிஹாம் யங் பல்கலை., இங்கு முதல் ஆண்டு படிக்கும் 120 மாணவர்களை முதல் ஆறு மாதத்திற்கு, இந்த ஆய்வில் ('ஸ்டெப் கவுன்டிங்') பங்கேற்க வைத்தனர். நாள் முழுவதும் எத்தனை அடிகள் நடக்கின்றனர் என்பதை துல்லியமாக கணக்கிட, ஒவ்வொருவரும் 24 மணி நேரம் 'பீடோமீட்டர்' அணிந்திருந்தனர். சராசரியாக 11,066 அடிகள் நடந்தனர். வாரத்துக்கு 6 நாட்கள் என மொத்தம் 24 வாரங்கள் நடந்தனர்.

சோதனை நாட்களில் இவர்கள் தினமும் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் எடைகள் கண்காணிக்கப்பட்டன. நடக்காத நேரங்களில் மற்ற வேலைகளுக்காக உட்கார்ந்திருக்கும் கால அவகாசமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட 10,000 அடிகளுக்கு மேலாக நடந்தவர்களுக்கு உடல் எடை, கொழுப்பு அதிகரிப்பு குறைக்குமா என ஆய்ந்தனர்.


latest tamil newsமுடிவில் சுமார் 15,000 அடிகள் நடந்தால் கூட, அவர்களின் உடல் எடை அதிகரித்ததை கண்டறிந்தனர். ஆய்வு நடந்த ஆறு மாதத்தில் சராசரியாக 1.5 கி.கி., வரை எடை அதிகரித்தது தெரியவந்தது. நடப்பதை தவிர, சரிவிகித உணவு, அமைதியான மனநிலை உட்பட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆய்வு குறித்து அப்பல்கலை பேராசிரியர் புரூஸ் பெய்லி கூறுகையில், 'உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு நடப்பது போன்ற உடற்பயிற்சிகள் மட்டும் பயன் தராது. தினமும் நீங்கள் எவ்வளவு அடிகள் நடக்கின்றீர்கள் என்பதை கண்காணித்தால், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது போன்ற நன்மைகள் வேண்டுமானால் கிடைக்கலாம். மற்றபடி நடப்பதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியவில்லை. தவிர, ஒரே சீராக எடையை பராமரிக்கவும் உதவவில்லை. எனினும் மக்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையில் இருந்து விடுபட முயற்சிக்கலாம்' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - vellore,இந்தியா
21-பிப்-202016:44:07 IST Report Abuse
ramesh maanavargalidam nadatha padum aaivu thavaranathu valara pillaigala vachu eppadi ippadi solla mudium above 40 age irukaravangal vachu check pannunga therium
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-பிப்-202016:41:01 IST Report Abuse
Endrum Indian 100% உண்மை. நான் (I am not Daibetic-69 வயது) 367 நாட்கள் பெண் என்னிடம் challenge செய்ததால் (முந்தா நேத்து தான்) இனிப்பு சாப்பிடாமல் (சர்க்கரை, கருப்பட்டி , வெல்லம்) கலந்த எந்த பொருளையும் சாப்பிடவில்லை. 20 நாட்கள் முன்பு வந்த வாட்ஸ் அப்பில் இருந்தது 1 மாதம் சர்க்கரை சாப்பிடவில்லையென்றால் 5 கிலோ குறையும், மற்றும், ஞாபக சக்தி பெருகும்,........... பலப்பல சமாச்சாரம் நல்லதாகும் என்று இருந்தது. நடந்தது என்ன 367 நாட்களில் (இப்போது தினமும் மதியம், இரவு சாப்பாட்டுக்கு பின் ஒரு இனிப்பு சாப்பிடுகின்றேன்) அதே எடை அதே ஞாபக சக்தி .....எல்லாம் அதே ஒரு மாற்றமும் இல்லை அதை போலவே இந்த நடை பயிற்சி ........எல்லாம் அப்படித்தான் என்று ஆணித்தரமாக கூற முடியும்.
Rate this:
Share this comment
Cancel
21-பிப்-202011:34:25 IST Report Abuse
ஆப்பு சாப்புடறதைக் குறையுங்க... கொழுப்பு நிறைந்த பீட்சா, பர்கர், பீஃப் சாப்புடாதீங்கன்னு சொன்னாங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X