சாலை விபத்து உயிரிழப்பை குறைக்க ரூ.7.83 லட்சம் கோடி முதலீடு தேவை

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

வாஷிங்டன்: 'இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை பாதியாக குறைக்க, அடுத்த, 10 ஆண்டுகளில், 7.83 லட்சம் கோடி ரூபாயை சாலை மேம்பாட்டுக்கு முதலீடு செய்ய வேண்டும்' என, உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.



latest tamil news



ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில், சமீபத்தில் சாலை பாதுகாப்புக்கான மூன்றாவது சர்வதேச அமைச்சர்கள் மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டில், இந்தியாவில் சாலை பாதுகாப்புக்கான தேவை என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சாலை விபத்துகளால் உயிரிழப்பது மிகவும் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு, 1.50 லட்சம் பேர், சாலை விபத்துகளால் உயிரிழக்கின்றனர். மேலும், 7.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உடல் பாகங்களை இழக்கின்றனர்.

இதனால், ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமும் பாதிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில், ஒவ்வொரு இரண்டு கி.மீ.,க்கும், ஆண்டுக்கு ஒருவர் உயிரிழக்கிறார். இது வளர்ந்த நாடுகளில் உள்ளதைவிட, 10 மடங்கு அதிகமாகும்.


latest tamil news



சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையை, பாதியாக குறைக்க, அடுத்த, 10 ஆண்டுகளில், இந்தியா, 7.83 லட்சம் கோடி ரூபாயை சாலை மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், ஜி.டி.பி.,யில், 3.7 சதவீதம் அளவுக்கு பொருளாதார பலனை பெற முடியும்.

சாலை விபத்தை குறைப்பதற்காக, இந்திய அரசு சமீபத்தில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது சிறந்த நடவடிக்கை. அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-பிப்-202011:24:32 IST Report Abuse
தமிழ் மக்களுக்கு சொந்த விழிப்புணர்வு வரும்வரை அரசாங்கம் எவ்வளவு செலவு செய்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர்போல வீண்தான்.
Rate this:
Share this comment
Cancel
21-பிப்-202009:56:49 IST Report Abuse
ஆப்பு வல்லரசாச்சே நாம். நம்மகிட்டே இல்லாத பணமா? சீக்கிரமே சூப்பர் ரோடுகள் வந்துரும். நேரு செஞ்ச சதிதான் இவ்வளவு லேட்.
Rate this:
Share this comment
Cancel
21-பிப்-202009:55:12 IST Report Abuse
ஆப்பு இருக்கிற இருப்பில் புதிய சாலைகள் தேவையில்லை. இருக்கிற சாலைகளை நன்கு பராமரித்தாலே போதும். இருபுறமும் கடைகள், ஆக்கிரமிப்புக்கள் பதாகைகள், தறுதலையாய் நிறுத்தப்படும் இரு, நான்கு சக்கர வாகனங்கள், தெருவில் சுற்றும் மாஉகள், அவற்றிற்கு அகத்திக்கீரையை 5 ரூவாய்க்கு வாங்கிப் போட்டு அஞ்சு கோடி ரூவா கிடைக்கும்னு வாயைப் பிளக்கும் பக்தர்கள், அந்த மாடுகள் போடும் சாணி, அதைப் பொருக்க வருபவர்கள் இப்பிடி ரோடு எப்புடி இருக்கணும்னு தெரியாதவங்க கிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கிறோம். இதெல்லாம் உலக வங்கிக்கு தெரியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X