பொது செய்தி

இந்தியா

மாநிலங்களுக்கு ரூ.19,950 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
GST,GoodsandServicesTax,GST_Tax,ஜிஎஸ்டி,மத்தியஅரசு,மாநிலஅரசு

புதுடில்லி: பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.19,950 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவை தொகையை மத்திய அரசு வழங்கியது.

ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறை கடந்த 2017 ஜூலையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநில அரசுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய, மத்திய அரசு இழப்பீட்டு தொகை வழங்கி வருகிறது.

கடந்த 2017 - 18 நிதியாண்டில் மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.41,146 கோடி (வருவாய் ரூ.62,611 கோடி), 2018 - 19ல் ரூ.69,275 கோடியை (வருவாய் ரூ.95,081 கோடி) மத்திய அரசு வழங்கியது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, ரூ.47,271 கோடியை மத்திய அரசு ஜி.எஸ்.டி., மூலம் வருவாய் ஈட்டிய நிலையில், மாநில அரசுக்கு ரூ.19,950 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.


latest tamil news



இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி., நிலுவை தொகை ரூ.19,950 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டில் விடுவிக்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.1,20,498 கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-பிப்-202008:06:43 IST Report Abuse
ஆரூர் ரங் 1 உலகப் பொருளாதார வீழ்ச்சியால் தற்காலிகமாக நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் ஜி எஸ் டி வசூலும் குறையும்போது அதற்கு மாநிலங்களுக்கு இழப்பீடு என்பது அர்த்தமற்றது .அது மத்தியத்திட்டங்களுக்கான நிதியைக்குறைத்து வளர்ச்சியை பாதிக்கும்.2 மாநிலங்களோ இந்த இழப்பீட்டை அரசு ஊழியர்களை குஷிப்படுத்தவும் , இலவசங்களுக்குமே வீணாக்கிவிடுகின்றன 3 தேர்தல் சமயத்தில் வியாபாரிகளைஎதிர்த்துக்கொள்ள பயந்து ஜி எஸ் டி வசூல நடவடிக்கையில் சுணக்கம் காட்டும் மாநிலங்களுக்கு இழப்பீடு எதற்கு?4 குறிப்பிட்ட அளவுக்குமேல் விவசாய விளைபொருட்களை இருப்புவைத்திருக்கும் பெரும் விவசாயிகளுக்கும் ஜி எஸ் டி ஒரு விழுக்காடாவது விதிக்கவேண்டும் .அப்போதுதான் பதுக்கலால் விலைவாசி ஏறுவது தடுக்கப்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X