'பாக்., ஜிந்தாபாத்' : முழக்கமிட்ட இளம்பெண் கைது

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (102)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு : கர்நாடகாவில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டத்தின் போது பாகிஸ்தான் வாழ்க என முழக்கமிட்ட அமுல்யா என்ற இளம்பெண், தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.



latest tamil news



பெங்களூருவில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தலைமையில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது நடந்த பொதுக் கூட்டத்தின் போது திடீரென மேடை ஏறிய இளம்பெண் ஒருவர், 'இந்துஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என மைக்கை பிடித்து முழக்கமிட்டார். பிறகு இந்துஸ்தான் ஜிந்தாபாத் மற்றும் பாக்., ஜிந்தாபாத் இடையேயான வித்தியாசம் குறித்து அவர் பேச துவங்கினார்.


latest tamil news



அப்போது மேடையில் இருந்த ஓவைசி உள்ளிட்ட சிலர் விரைந்து வந்து அந்த பெண்ணை தடுத்தனர். அவரிடம் இருந்து மைக்கை வாங்க முயற்சித்தும், அப்பெண் பிடிவாதமாக பேச முயற்சித்தார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு வந்த போலீசாரை அழைத்த ஓவைசி, அப்பெண்ணை அழைத்துச் செல்லும் படி கூறினார்.

இதனையடுத்து அப்பெண் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அவர் மீது பிரிவு 124ஏ கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட, 14 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். அந்த பெண்ணின் பெயர் அமுல்யா என தெரிய வந்தது.

இது தொடர்பாக பேசிய ஓவைசி, இத்தகைய முழக்கம் கண்டனத்திற்குரியது. இப்பெண் எங்கள் அமைப்பை சேர்ந்தவர் அல்ல. பாரத் ஜிந்தாபாத் என்பதே எங்களின் முழக்கம். பாக்., ஜிந்தாபாத் என்பது அல்ல என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
22-பிப்-202021:16:22 IST Report Abuse
chakra உதவாக்கரை அரசாங்கம் சும்மாவாச்சும் ஒரு பைத்தியக்காரியை பிடித்து வைத்து வித்தை காட்டுகிறார்கள்
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
22-பிப்-202013:58:08 IST Report Abuse
V.B.RAM இவருக்கும், ஸ்டாலின், வைகோ, திருமுருக காந்தி, சீமான், திருமா போன்றவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம். வார்த்தைகளில் தான் வேறுபாடு, ஆனால் நடத்தை ஒன்றுதான்
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
21-பிப்-202019:59:59 IST Report Abuse
KavikumarRam ///இது தொடர்பாக பேசிய ஓவைசி, இத்தகைய முழக்கம் கண்டனத்திற்குரியது. இப்பெண் எங்கள் அமைப்பை சேர்ந்தவர் அல்ல./// பய அரண்டுட்டான். இவனை நம்பி இந்த மூளைச்சலவை குரூப் நாசமா போகுது. அப்படியே பாகிஸ்தானுக்கு பேக் பண்ணவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X