சீனாவை தொடர்ந்து தென் கொரியாவை மிரட்டும் கொரோனா

Added : பிப் 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

பீஜிங் : கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் 2200 க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில், தற்போது தென் கொரியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவ துவங்கி உள்ளது.



latest tamil news



கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பலியானவர்களில் எண்ணிக்கை 2233 ஆக அதிகரித்துள்ளது. ஹூபி பகுதியில் மட்டும் 115 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் சுமார் 75,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவது குறைந்துள்ளதாக சீனா கூறினாலும், வைரஸ் கண்டறியப்பட்டு 50 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கபடாததால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில் சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் தென் கொரியாவில் வேகமாக பரவி வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. கொரோனாவால் ஏற்கனவே 156 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 52 க்கும் அதிகமானவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாக தெரிகிறது. 25 க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா பரவி இருப்பதால், மற்ற நாடுகளையும் இந்த வைரஸ் தாக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் 30 வரை சீனாவிற்கு ஏர்இந்தியா விமானங்கள் ஏதும் இயக்கப்படாது என இந்தியாவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-பிப்-202019:52:07 IST Report Abuse
தமிழ்வேல் ஜூன் 30 வரை சீனாவிற்கு ஏர்இந்தியா விமானங்கள் ஏதும் இயக்கப்படாது என்றால் பாக்கி இந்தியர்களை எப்படி அழைத்துக்கொள்வது ?
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
21-பிப்-202009:04:24 IST Report Abuse
svs //...ஜூன் 30 வரை சீனாவிற்கு ஏர்இந்தியா விமானங்கள் ஏதும் இயக்கப்படாது ....//.....ஜூலை மாதம் அங்கு கோடை துவங்கும் வரை விமானங்கள் சீனா செல்லாது ......இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லையாம் ....டெங்கு ஜுரத்திற்கும் அல்லோபதியில் மருந்து கிடையாது .....ஆயுர்வேத சித்த மருத்துவர்கள் கூறுவதை கேட்டு பாரம்பரிய உணவு பழக்கத்துக்கு மாற வேண்டும் .....நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானால் இது போன்ற வியாதிகள் வர வாய்ப்பில்லை ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X