பொது செய்தி

இந்தியா

மகா சிவராத்திரி : சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவதால் நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவன் கோயில்களில் குவிந்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவதால் நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.



latest tamil news



latest tamil news


மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவன் கோயில்களில் குவிந்து, வழிபாடு நடத்தி வருகின்றனர். சிவன் கோயில்களில் நடக்கும் 6 கால பூஜைகளில் கலந்து கொண்டு, 'ஓம் நமச்சிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்து, இரவில் கண் விழித்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம், சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புகழ்பெற்ற சிவாயலங்களில் சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.


latest tamil news




latest tamil news


உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அதிக அளவில் சாதுக்களும், பக்தர்களும் குவிந்துள்ளனர். ம.பி., - உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வரர் ஆலயம், பஞ்சாப் - அமிர்தசரசில் உள்ள சிவாலய பாக் பையான் ஆலயம், டில்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள கெளரிசங்கர் ஆலயம், மகாராஷ்டிரா - மும்பையில் உள்ள பாபுல்நாத் ஆலயம் ஆகியவற்றில் மகாசிவராத்திரி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் பலபுரகி பகுதியில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் 25 அடி உயரத்தில் 300 கிலோ பயறு வகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை ஏராளமானோர் வழிபட்டு செல்கின்றனர். ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.sakkaravarthi - sivakasi,இந்தியா
22-பிப்-202005:54:13 IST Report Abuse
s.sakkaravarthi ஆன்மிக பூமி
Rate this:
Cancel
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
21-பிப்-202016:09:16 IST Report Abuse
பெரிய ராசு உலகை கட்டிக்காக்கும் ஈசன் இந்தியாவுக்கு அருள் பாவிக்கட்டும் .. ஓம் நமச்சிவாயா
Rate this:
Cancel
Saravanan AE - Navi Mumbai,இந்தியா
21-பிப்-202015:48:00 IST Report Abuse
Saravanan AE ஓம் நமசிவாய நமஹ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X