வெலிங்டன் டெஸ்ட்: மழையால் பாதியில் ரத்து

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

வெலிங்டன்: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.



latest tamil news


நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடக்கிறது. இந்திய லெவன் அணியில் அஷ்வின், பிரித்வி ஷா இடம் பிடித்தனர். நியூசிலாந்து அணியில் ஜேமிசன் அறிமுகமானார். ராஸ் டெய்லர் தனது 100வது டெஸ்டில் களமிறங்கினார். 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


latest tamil news



இந்திய அணிக்கு பிரித்வி ஷா (16) ஏமாற்றினார். மயங்க் அகர்வால் (34) ஆறுதல் தந்தார். புஜாரா (11), கேப்டன் கோஹ்லி (2), ஹனுமா விஹாரி (7) நிலைக்கவில்லை.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. ரகானே (38), ரிஷாப் பன்ட் (10) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் ஜேமிசன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani S -  ( Posted via: Dinamalar Android App )
22-பிப்-202003:38:13 IST Report Abuse
Mani S remba nalladhu... madayanunga idhaiyum kaalaila ezundhu paarpaanunga...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X