'ஆசியாவின் நோயாளி சீனா:' பத்திரிகையாளர்களை வெளியேற்ற கெடு

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: 'ஆசியாவின் உண்மை நோயாளி சீனா' என்ற செய்தியை வெளியிட்ட, ஜோஷ் ஷின், ச்சாவ் டெங், மற்றும் பிலிப் வென் என்ற மூன்று பத்திரிகையாளர்களை, சீனாவிலிருந்து வெளியேற ஐந்து நாள்கள் கெடு விதித்திருக்கிறது, சீன அரசு.


latest tamil news


சீனாவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து, கடந்த 3-ம் தேதி, 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற நாளிதழின் முதல் பக்கத்தில், 'ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா' என்று தலைப்பிட்ட செய்தி வெளியானது. அந்தச் செய்தியில், சீனா கடும் பொருளாதாரம் வீழ்ச்சியில் சிக்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.


latest tamil news


இதையடுத்து கடந்த 19ம் தேதி, சீன அரசு வெளியிட்ட அறிக்கையில், 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் அவதூறு பரப்பும் வகையில், செய்தி வெளியிட்டுள்ளது. அந்தத் தவற்றைச் சரிசெய்துகொள்ள வேண்டும். அந்தச் செய்தியை வெளியிட்டதில் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாளிதழின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, வலியுறுத்தி இருந்தது.சீனாவின் இந்த அறிக்கையை, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அந்த நாளிதழ் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.


latest tamil news


இந்நிலையில், 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சீன அரசின் உத்தரவை மதிக்கவில்லை. சர்ச்சைக்குரிய செய்தியில் தொடர்புடைய, பீஜிங்கைச் சேர்ந்த, ஜோஷ் ஷின், ச்சாவ் டெங், மற்றும் பிலிப் வென் ஆகியோர் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மூவரும் சீனாவிலிருந்து வெளியேற ஐந்து நாள்கள் கெடு விதிக்கப்படுகிறது' என, சீனாவின் வெளிவிவகார அமைச்சக செயலர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.



latest tamil news


சீனாவின் வுஹான் நகரில் உள்ள உண்மை நிலையை வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட சீன பத்திரிகையாளர் மாயமாகினர். அதற்கு சீன அரசு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், மூன்று பத்திரிகையாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றக் கெடு விதித்துள்ளதால், 'சீனாவில் பத்திரிகையாளர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது' என, அனைவரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-பிப்-202017:38:23 IST Report Abuse
Ganesan Madurai சுந்தரவல்லி அங்க போனா சரியாபோயிரும்.
Rate this:
Cancel
Nagarajan Jayakumar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-பிப்-202017:25:28 IST Report Abuse
Nagarajan Jayakumar பேச்சுரிமை பற்றி பேசும் நம்ம ஊர் கம்யூனிஸ்ட் அறிவு ஜீவிகள் இதற்கு என்ன சொல்வார்கள்?
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
21-பிப்-202016:41:45 IST Report Abuse
vnatarajan பத்திரிகை சுதந்திரத்தைப் பற்றி இந்தியாவிலுள்ள கம்ம்யூனிஸ்ட் காம்ரேடுக்கள் வாய் திறந்து என்ன சொல்லப்போகிறார்கள் இல்லையேல் எப்போதும்போல் மவுனம் சாதிப்பார்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X