பொது செய்தி

தமிழ்நாடு

விபத்துக்கு காரணம் டிரைவர் மட்டுமா? லாரி உரிமையாளர்களும் பொறுப்பு

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
அவிநாசி விபத்து, டிரைவர், பஸ் விபத்து, கேரளா

நள்ளிரவு தாண்டி, அதிகாலை வரையிலான நேரம், டிரைவர்களை அசதிக்குள்ளாக்கும் தருணம். களைப்புடன் வாகனத்தை இயக்கும்போது, தன்னையறியாமல் டிரைவர் துாங்கி விடுவதுண்டு. துாக்கம் வருவது போல் உணர்ந்தால், இடையில் உள்ள டோல்கேட் அல்லது உகந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தி, ஓய்வெடுத்த பின்னும், டீ உள்ளிட்ட பானங்களை அருந்தி சோர்வு நீங்கிய பின்னும், வாகனங்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இதை டிரைவர்கள் பின்பற்று வதில்லை. வாகன உரிமையாளர்களும் அறிவுறுத்துவதில்லை. பல நேரங்களில், நாள் கணக்கில் டிரைவர்கள் போதிய ஓய்வின்றி லாரிகளை இயக்க, உரிமையாளர்களால் வற்புறுத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. நேற்று கோர விபத்து நேர்ந்தபோது நேரம் அதிகாலை 3:30 மணி. உயிர்களைப் பலிவாங்கிய கன்டெய்னர் லாரி, கொச்சியில் இருந்து புறப்பட்டிருக்கிறது.


latest tamil news


பெங்களூருவுக்கு வேகமாகச் செல்லும் எண்ணத்தில், கன்டெய்னர் லாரி டிரைவர் ஹேமந்த்ராஜ், ஓய்வின்றி இயக்கியுள்ளார்.'துாக்கக் கலக்கத்தில்தான் லாரி டிரைவர், மையத்தடுப்பின் மீது லாரியை ஏற்றியுள்ளார். பின், அது கட்டுப்பாட்டை இழந்து, 19 உயிர்களைப் பலிவாங்க காரணமாக அமைந்திருக்கிறது. மையத்தடுப்பின் மீது ஏறிய பின்தான், லாரி டயர் வெடித்திருக்க வேண்டும். டயர் வெடித்ததால்தான் விபத்து நேர்ந்ததாக கூறுவது, திசை திருப்புவதற்காகத் தான்' என்று, விபத்து கோரத்தைப் பார்த்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கூறுகின்றனர்.

விபத்துக்கு காரணமான டிரைவர் மீது, 304ஏ (விபத்து) என்று சாதாரணப்பிரிவில், வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கொலை குற்றங்களுக்கு நிகரான பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், டிரைவர் மட்டுமல்லாது, கன்டெய்னர் லாரியின் உரிமையாளர் மீதும் வழக்கு பாய வேண்டும். அப்போது தான், எதிர்காலத்தில், இதுபோன்ற கோர விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். விபத்தில் பலியானவர்களின் உயிர்கள் விலைமதிப்பற்றவை. 19 பேரை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு எந்த வார்த்தைகளும் இல்லை.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-பிப்-202005:24:54 IST Report Abuse
 nicolethomson இவ்ளோ பெரிய லாரிக்கு இரண்டு டிரைவர்கள் வைக்காமல் இவ்ளோ தூரம் அனுப்பிய அந்த முதலாளிலியை தூக்கில் ஏற்றுக
Rate this:
Share this comment
Cancel
21-பிப்-202018:02:54 IST Report Abuse
சேரன் செங்குட்டுவன் விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களும் கேரள பதிவு எண் கொண்டவை.
Rate this:
Share this comment
Cancel
raman - Madurai,இந்தியா
21-பிப்-202017:08:32 IST Report Abuse
raman விபத்துக்கு பொதுவான காரணம், காலை 1மணி முதல் 4மணிவரை தூக்கம் வரும் நேரம் வண்டி ஓட்டுவது. டிராவல்ஸ் போல் 2டிரைவர்கள் இருக்கலாம். தென் இந்தியாவின் பெரிய நிறுவனம் T V S தங்களது லாரிகளை இரவு 11மணி முதல் காலை 6மணிவரை அந்த அந்த டிப்போக்களில் நிறுத்தி வைப்பார்கள். ஓட்டுனருக்கு ஓய்வு . இதனால் அந்நிறுவனத்தின் லாரிகள் விபத்தில் சிக்குவதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X