'எனது மகளை முஸ்லிம்கள் தவறாக வழிநடத்துகின்றனர்:' அமுல்யாவின் தந்தை வருத்தம்

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (52)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, பெங்களூருவில் நடந்த பேரணியில், மேடை ஏறி, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என, முழக்கமிட்ட, இளம் பெண் அமுல்யாவின் தந்தை, தனது மகளின் செய்கைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, 'திப்பு சுல்தான் யுனைடெட் பிரண்ட்' என்ற அமைப்பு, பெங்களூரு சுதந்திர பூங்கா அருகில் நேற்று மாலை போராட்டம் நடத்தியது. கூட்டம் துவங்கிய உடன், இளம்பெண் ஒருவர் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என, தொடர்ந்து மூன்று முறை கோஷமெழுப்பினார். கூட்டத்தில் கலந்து கொண்ட, ஐதராபாத் லோக்சபா தொகுதி எம்.பி.,யான அசதுத்தீன் ஒவைசியும், போலீசாரும், அந்தப் பெண்ணிடமிருந்த மைக்கை பிடுங்கி, பேச்சை நிறுத்தும்படி கூறினர். பின், போலீசார், அப்பெண்ணை, உப்பார்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.




சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க பாகிஸ்தான் வாழ்க என்று இளம்பெண் மேடையில் கத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தலைமையில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது திடீரென மேடை ஏறிய இளம்பெண் ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என மைக்கை பிடித்து முழக்கமிட துவங்கினார். 
அப்போது மேடையில் இருந்த ஓவைசி உள்ளிட்ட சிலர் விரைந்து வந்து அந்த பெண்ணை தடுத்தனர். அவரிடம் இருந்து மைக்கை வாங்க முயற்சித்தும், அப்பெண் பிடிவாதமாக பாகிஸ்தான் ஜிந்தாபாத் என தொடர்ந்து முழுங்கிவந்தார். இதனையடுத்து அப்பெண் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அவர் மீது பிரிவு 124ஏ கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் எங்கள் அமைப்பை சேர்ந்தவர் இல்லை என்று ஓவைசி மறுத்துவிட்டார். இருப்பினும் அமைப்பில் இல்லாத பெண்ணை மேடையில் ஏறி பேச ஏன் அனுமதிக்க வேண்டும், சிஏஏ எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக கூட்டங்கள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

latest tamil news



விசாரணையில், அவர், அண்ணசிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவை சேர்ந்த அமுல்யா லியோனா, என்பதும், பெங்களூரு என்.எம்.கே.ஆர்.வி., கல்லுாரியில் பி.ஏ., இதழியல் படிப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. அந்தப் பெண், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டுக்கு எதிராக பேசியதும் தெரிய வந்தது. இந்நிலையில், அந்த பெண் மீது, தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமுல்யாவின் தந்தை (பெயர் வெளியிடப்படவில்லை), 'எனது மகள் அமுல்யா அப்படிச் சொல்லியது தவறு. அமுல்யா சமீபகாலமாக சில முஸ்லிம் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளார். அவரை சில முஸ்லிம்கள் தவறாக வழிநடத்துகின்றனர். அவர் எனது பேச்சைக் கேட்பதே இல்லை' என, வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
25-பிப்-202015:46:16 IST Report Abuse
இந்தியன் kumar இவளை பெற்ற பெட்டோர்கள் வெட்கி அவமானப்படவேண்டும்.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
23-பிப்-202017:42:48 IST Report Abuse
sridhar சார், என்ன உங்க பெண்ணுக்கு ஒரு அஞ்சு வயசு இருக்குமா ? தவறா நடத்தறாங்களாம் . இது மாதிரி அறக்கொறையா படிச்ச தறுதலை பெண்கள் ஏராளம். உள்ள தள்ளி பெண்டு எடுத்தால் தான் புத்தி வரும். தேச விரோதம் பேசி பெரிய ஆளா வருவதற்கு அது என்ன தமிழ்நாடா ?.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-பிப்-202011:07:04 IST Report Abuse
Malick Raja இதைவிட பல சதிகளையும் முறியடித்தான் போராட்டங்கள் வெற்றிபெற்றுள்ள வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X