டில்லியில் 39 ஏக்கரில் புதிய ராணுவ தலைமையகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லியில் 39 ஏக்கரில் புதிய ராணுவ தலைமையகம்

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (2)
Share

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லியில் சுமார் 39 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ராணுவத்திற்கு புதிய தலைமையகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.



latest tamil news



இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், டில்லியில் அமைய உள்ள புதிய 'தால் சேனா பவன்' கட்டிடத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பூமி பூஜையை நடத்தி வைத்து, அடிக்கல் நாட்டினார். அலுவலகம் கட்டிடம், பார்க்கிங் என ஏறக்குறைய 7.5 லட்சம் சதுர மீட்டரில் ராணுவ தலைமையக வளாகம் அமைய உள்ளது.


latest tamil news


மொத்தம் 6014 அலுவலகங்கள், 1684 அலுவலர்களுக்கான வீடுகள் ஆகியனவும் இந்த வளாகத்தில் அமைய உள்ளது. இதனால் இளைஞர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X