பொது செய்தி

இந்தியா

உ.பி., ஆர்எஸ்எஸ் பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
up, rss,school, muslimstudents, students, ஆர்எஸ்எஸ், முஸ்லிம்மாணவர்கள், எண்ணிக்கை, அதிகரிப்பு

இந்த செய்தியை கேட்க

அலகாபாத் : உத்தர பிரதேச மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்வி பிரிவான வித்யா பாரதி நடத்தும் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும், இந்த பள்ளிகளில், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆசிரியர்களாக, முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஸ்லோகங்கள் மற்றும் மந்திரங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

மாணவர்கள் கல்வியை தாண்டி விளையாட்டிலும் சிறந்து விளங்குகின்றனர். பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஜ்வாலா தேவி சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் முகமது அப்சர் மற்றும் முகமது ஷபான் ஆகியோர், கவுகாத்தியில் நடந்த இளைஞர் விளையாட்டு திருவிழாவில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்றனர்.


latest tamil news
வித்யாபாரதி அமைப்பின் கூடுதல் செயலர் சிந்தமணி சிங் கூறுகையில், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத்தை சேர்ந்த 12 ஆயிரம் பேர், உ.பி.,யில் படிக்கின்றனர். கிழக்கு உ.பி.,யில் உள்ள 1,194 பள்ளிகளில் 9,037 முஸ்லிம் மாணவர்கள் 10 கிறிஸ்தவ மாணவர்கள் படிக்கின்றனர். மற்றவர்கள் மேற்கு உ.பி.,யில் படிக்கின்றனர்.

தரமான கல்வி மற்றும் உணவு வழங்கப்படுவதால், எங்களது பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 49 மாவட்டங்கள் அடங்கிய கிழக்கு உ.பி.,யில் கடந்த 2016ம் ஆண்டு 6,890 முஸ்லிம் மாணவர்கள் படித்தனர். அந்த எண்ணிக்கை 2019ல் 9,037 ஆக அதிகரித்துள்ளது. வித்யாபாரதி அமைப்பு நடத்தும் பள்ளிகளில் அனைத்து மதங்களையும் சேர்த்து மொத்தம் 6 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சரஸ்வதி சிஷூ மந்திர் மற்றும் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிகளில் படிக்கும் பல முஸ்லிம் மாணவர்கள் மற்றும் மாணவிகள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கி, பள்ளிகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக ஜ்வாலா தேவி சரஸ்வதி மந்திர் பள்ளி முதல்வர் யுகுல் கிஷோர் மிஸ்ரா கூறுகையில், முஸ்லிம் மாணவர்கள் விளையாட்டு துறையிலும், கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர். தரமான கல்வி வழங்குவதால், எங்களது பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
22-பிப்-202002:25:40 IST Report Abuse
Rajagopal நல்லது. கல்வி அறிவு பெற்று, நல்ல வேலை கிடைத்து, சமூகத்தின் பொருளாதாரம் முன்னேறினால், மக்களை மூளை சலவை செய்து ஆடுகளை போல நடத்துவது குறையும். கிறித்துவர் அல்லாத பலர் மிஷனரி பள்ளிகளில் படித்து வளர்வதைப்போல, கல்வி அளிப்பதில் மதமோ, சாதியோ, பொருளாதார ஏற்றத்தாழ்வோ கூடாது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-பிப்-202001:05:56 IST Report Abuse
தமிழ்வேல் சிந்திக்க வைக்கின்றது..
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
21-பிப்-202019:33:46 IST Report Abuse
PANDA PANDI நீங்க என்ன சொல்லவருகிறீர்கள் சாமியோவ்...
Rate this:
Share this comment
kumzi - trichy,இந்தியா
22-பிப்-202002:19:45 IST Report Abuse
kumziஉன்ன மாதிரி கருப்பு பாவாடைங்களை வெள்ளைக்கார பாவாடைகளுக்கு புடிக்காதாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X