சர்ஜிக்கல் ஸ்டிரைக் : மோடியிடம் விபரம் கேட்கும் கமல்நாத்

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

போபால் : சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி மட்டும் பேசிக் கொண்டே இருக்கும் மோடி அது பற்றி விபரம் தர வேண்டும் என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கேள்வி எழுப்பி உள்ளார்.



latest tamil news


ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், கடந்த 6 முதல் 8 மாதங்களில் இளைஞர்கள் பற்றி மோடி பேசி கேட்டிருக்கிறீர்களா? விவசாயிகள் பற்றி பேசி கேட்டிருக்கிறீர்களா? 2014 லோக்சபா தேர்தலுக்கு முன், நான் பிரதமரானால் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவேன் என்றார். 2 கோடியை மறந்து விடுங்கள். அவர் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்த 2 லட்சம் பேரின் பெயர்களை சொல்ல சொல்லுங்கள்.


latest tamil news


1971 ல் பாக்., உடனான போரில் வெற்றி பெற்ற பிறகு 90,000 எதிரி நாட்டு வீரர்களை இந்திரா அரசு சரணடைய வைத்தது பற்றி பிரதமர் பேச மாட்டார். ஆனால் அவர் சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி மட்டுமே பேசுவார். சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்றால் என்ன? அது பற்றி விபரம் தாருங்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
22-பிப்-202007:34:08 IST Report Abuse
Indhuindian கலவரத்தை தூண்டிவிட்டு ஒரு நாலாயிரம் சீக்கியர்களை படு கொலைப்பற்றியும் அதற்க்கு கட்டளை இட்டு தூண்டிவிட்டு மேற் பார்வை செய்ததுவிட்டு இப்போது ஹாயாக என்ஜோய் பண்ணும் காங்கிரெஸ்க்காரர்களை பற்றியும் பேசலாமா?
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
22-பிப்-202007:25:47 IST Report Abuse
Nathan அப்பாயிண்ட்மெண்ட் ஊழலில் அமுக்கின ஐம்பதாயிரம் கோடி ரூபாய் எங்கடான்னா, கமலநாத் சொல்லுவான் , இருக்கவே இருக்கு ஒரே ஒரு புளிச்ச வார்த்தை தேசதுரோகி.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-பிப்-202005:55:38 IST Report Abuse
மலரின் மகள் எளிமையாக அனைவருக்கும் புரியும்படி சொல்வதானால் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்பது பாகிஸ்தானை மூச் பேச் இல்லாமல் பிரமித்து வைக்க செய்தது, காங்கிரசை மூக்கின் மீது விரலை வைக்க செய்வது தான். பயங்கரவாதிகள் பயிற்சி மற்றும் பாசறைகள் நிர்மூலம். அவர்கள் அனைவரும் இந்தியாவிற்குள் காஸ்மீர் வழியாகவும் பங்காளதேசத்தின் எல்லைவழியாகவும் வருவதற்கு தயாராக இருந்தார்கள். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, அவர்கள் இப்படி நடக்குமா என்று கனவில் கூடா நினைத்தே பார்த்திராத வகையில் கண்மூடி திறப்பதற்குள் முடிந்து விட்டது. அது மட்டுமா அதன் பிறகு அவர்கள் இந்தியாவை கண்டு அஞ்சுகிறார்கள் என்பது உலகளாவிய அளவில் அலசி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகி விட்டது. உலகம் முழுவதும் பேசப்படுவது இப்போது இருக்கும் அரசு இம் என்றால் நடுக்கம் ஏன் என்றால் உதறல் என்று காங்கிரஸ் போலிருக்காது என்றும் டோக்லாம்ல் கூட சீனாவை எதிர்க்கும் என்றும் உலகிற்கு பறை சாற்றியது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் இன் நேரடி நேர்வினை. மலேசியா அரசையும் பொருளாதார சர்ஜிக்கல் செய்திருக்கிறோம் அதை பற்றி பேசாமலே. காண்கிற அரசு என்றால் பாகிஸ்தானிற்கு குளிர் விட்டு போகும். மோடி நிச்சயம் ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கவே மாட்டார் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கிறது. எந்த காங்கிரஸ் அரசாவது பாகிஸ்தானை பார்த்து உங்களை ஓரிரவில் காணாமல் செய்து விடுவோம் என்று பேசி இருக்கிறதா? உடலும் மனமும் தைரியமற்றுப்போனதே அன்று. இன்று நமது வலிமையான அரசு இருப்பதால் வெளிநாட்டில் வாழ்வோருக்கு மிக்க மரியாதை. பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருக்கிறது, பாகிஸ்தானை எதிர்த்து ஒரு தோட்டா சென்றாலும் அரேபிய தேசம் மொத்தமும் துணைக்கு வரும் துருக்கி ராணுவத்தை அனுப்பும் என்றெல்லாம் வெறும் வெட்டி பேச்சு பேசி காங்கிரஸ் அரசின் பொது நம்மை பயமுறுத்தினார்கள். அந்த பேச்சுக்கள் எல்லாம் எங்கே? எங்கள் மக்களை பாதுகாக்க நாங்கள் எந்த அளவிற்கும் செல்வோம் என்று செய்து காட்டிய வீரம் தான் சர்ஜிகள் ஸ்ட்ரைக். அது மட்டுமல்ல அரபு கூட்டமைப்புக்குள் பக்ஷிதன் கோரிக்கையை செவிமடுக்கவும் இல்லை, அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு தயாரில்லையே அவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X