சர்ஜிக்கல் ஸ்டிரைக் : மோடியிடம் விபரம் கேட்கும் கமல்நாத்| Dinamalar

சர்ஜிக்கல் ஸ்டிரைக் : மோடியிடம் விபரம் கேட்கும் கமல்நாத்

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (49)
Share

இந்த செய்தியை கேட்க

போபால் : சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி மட்டும் பேசிக் கொண்டே இருக்கும் மோடி அது பற்றி விபரம் தர வேண்டும் என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கேள்வி எழுப்பி உள்ளார்.



latest tamil news


ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், கடந்த 6 முதல் 8 மாதங்களில் இளைஞர்கள் பற்றி மோடி பேசி கேட்டிருக்கிறீர்களா? விவசாயிகள் பற்றி பேசி கேட்டிருக்கிறீர்களா? 2014 லோக்சபா தேர்தலுக்கு முன், நான் பிரதமரானால் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவேன் என்றார். 2 கோடியை மறந்து விடுங்கள். அவர் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்த 2 லட்சம் பேரின் பெயர்களை சொல்ல சொல்லுங்கள்.


latest tamil news


1971 ல் பாக்., உடனான போரில் வெற்றி பெற்ற பிறகு 90,000 எதிரி நாட்டு வீரர்களை இந்திரா அரசு சரணடைய வைத்தது பற்றி பிரதமர் பேச மாட்டார். ஆனால் அவர் சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி மட்டுமே பேசுவார். சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்றால் என்ன? அது பற்றி விபரம் தாருங்கள் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X