இந்திய பெண்கள் வெற்றி துவக்கம்: 'டி-20' உலக கோப்பையில் அபாரம்

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
ICC, AUSvIND, T20WorldCup, உலககோப்பை, கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா,

இந்த செய்தியை கேட்க

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய இந்தியப்பெண்கள் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 'டுவென்டி-20' உலக கோப்பை துவங்கியது. சிட்னியில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது.


latest tamil news




தீப்தி நம்பிக்கை


இந்திய அணிக்கு மந்தனா (10) ஏமாற்றினார். ஷபாலி வர்மா 29 ரன்கள் எடுத்தார். ஜோனாசன் பந்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் (2) சிக்கினார். கிம்மன்சி பந்துவீச்சில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (26) ஆட்டமிழந்தார். தீப்தி சர்மா சிறப்பாக விளையாடினார். இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. தீப்தி சர்மா (49), வேதா (9) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோனாசன் 2 விக்கெட் வீழ்த்தினார்.


latest tamil news





பூனம் அசத்தல்


ஆஸ்திரேலிய அணிக்கு மூனே (6) ஒற்றை இலக்கில் திரும்பினார். கேப்டன் மெக் லானிங் 5 ரன்கள் எடுத்தார். பூனம் யாதவ் 'சுழலில்' ஹாய்னஸ் (6), எல்லிஸ் பெர்ரி (0), ஜோனாசன் (2) அவுட்டாகினர். அலிசா ஹீலே (51) அரை சதம் கடந்தார். கம்மின்சி (4) ரன் அவுட்டாக தோல்வி உறுதியானது.


latest tamil news


முடிவில், ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக பூனம் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-பிப்-202018:17:55 IST Report Abuse
athi...munnar congrats....
Rate this:
Share this comment
Cancel
swega - Dindigul,இந்தியா
21-பிப்-202018:01:24 IST Report Abuse
swega Congrats
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X