டிரம்ப்புடன் வரும் மகள், மருமகன்?| Daughter Ivanka, son-in law Jared Kushner to accompany Trump during India visit | Dinamalar

டிரம்ப்புடன் வரும் மகள், மருமகன்?

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (5)
Share
Daughter, Ivanka, soninlaw, JaredKushner, Trump, India, us, america, donaldtrump,  unitedstates,  டிரம்ப், அதிபர்டிரம்ப், இந்தியா, இவாங்கா, மெலினா, மருமகன், மகள்,

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலினாவுடன், அவர்களது மகள் இவாங்கா மற்றும் மருமகன் ஜெர்ட் குஷ்னர் ஆகியோரும் வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். குஜராத் வரும் அவர், ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைக்கிறார். அங்கு நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பேச உள்ளார்.

டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்க குஜராத் அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று(பிப்.,20) கூட்டம் ஒன்றில் டிரம்ப் பேசும் போது, தனது இந்திய பயணத்தின் போது வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொலரோடாவில் நடந்த கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது: புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது. அடுத்த வாரம் நான் இந்தியா செல்ல உள்ளேன். அந்தநாடு, பல ஆண்டுகளாக வரி மூலம் நம்மை துன்பப்படுத்தியது. ஆனால், நான் பிரதமர் மோடியை மிகவும் மதிக்கிறேன். வர்த்தகம் குறித்து சிறிது பேசுவோம். இந்தியாதான், நமக்கு உலகளவில் அதிக வரி விதிக்கிறது. ஆனால், உலகின் மிகப்பெரிய மைதானத்தில் 1 கோடி பேரை நான் பார்க்க போவதாக கேள்விப்படுகிறேன் என்றார்.


latest tamil news



இதனிடையே, இந்தியா வரும் டிரம்ப், மனைவி மெலினாவுடன் மகள் இவாங்கா மருமகன் குஷ்னரும் வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மகளும், மருமகனும் தான் டிரம்ப்பின் மூத்த ஆலோசகர்களாக செயல்படுகின்றனர். இவர்களுடன் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைடிஜெர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஒபிரையன், கருவூல செயலாளர் ஸ்டீவ் முசின், வர்த்தக துறை செயலர் வில்பர் ரோஸ், நிர்வாகம் மற்றும் பட்ஜெட் துறை இயக்குநர் மைக் முல்வானேவும் உடன் வர உள்ளனர்.


latest tamil news



38 வயதாகும் டிரம்ப்பின் மகள் இவாங்கா, கடந்த 2017 ம் ஆண்டு நடந்த சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்க ஐதராபாத் வந்திருந்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X