பொது செய்தி

இந்தியா

2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருக்குமா? வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்திலிருந்த, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டு, புதிதாக 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.latest tamil news


கறுப்புப் பணத்தைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, ஆன்லைன் பணப் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதனால், புதிதாக அறிமுகம் செய்த, 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதையும் ஆண்டுக்கு ஆண்டு மத்திய அரசு குறைத்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


latest tamil news


இதனால், 'எப்போது வேண்டுமானாலும், 2,000 ரூபாய் நோட்டை செல்லாது என, மத்திய அரசு அறிக்கும்' என, பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் இன்று காலையிலிருந்து, சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும், இந்தியன் வங்கி வரும் மார்ச் 1ம் தேதி முதல், 2,000 ரூபாய் நோட்டுக்களின் பரிவர்த்தனையை நிறுத்தவுள்ளதாகத் தகவல்கள் பரவி வந்தன. இதனால், பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.இந்நிலையில், இந்திய வங்கி ஊழியர் சங்க, அகில இந்தியச் செயலர் (BEFI) கே.கிருஷ்ணன் கூறியதாவது:ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பவர்கள், 4,000, 6,000 என, எடுத்தால், முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளே வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் வந்து சில்லறை கேட்கின்றனர்.


latest tamil news


ஏ.டி.எம்., கொண்டுவந்த அடிப்படை நோக்கம், வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனைக்காக வங்கிக்கு வரக் கூடாது என்பது தான். ஆனால், அந்த நோக்கம் சிதைகிறது. எனவே, வரும் மார்ச் 1ம் தேதி முதல், 2,000 ரூபாய் நோட்டுக்களை, ஏ.டி.எம்.,களில் வைப்பதில்லை என, இந்தியன் வங்கி முடிவெடுத்துள்ளது.மார்ச் 1ம் தேதி முதல், இந்தியன் வங்கி ஏ.டி.எம்.,களில், 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே நிரப்பப்படும். 2,000 ரூபாய் நோட்டுகள் உள்ள 'டிரே' நிரப்பப்படாது. இதைப் புரிந்து கொள்ளாது அனைவரும் தவறான கருத்தை பரப்பி வருகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-பிப்-202001:21:55 IST Report Abuse
மலரின் மகள் பணமதிப்பிழப்பு என்பது இல்லை. அதே வேளையில் ௨௦௦௦ ரூ பயன்பாட்டிலிருந்து பெரும்பாலும் குறைக்கப்படும். நாடு முழுவதும் டிஜிட்டல் முறை ஏறத்தாழ பரவலாக்கப்பட்டு விட்டது. வங்கி கணக்குகள் எளிமையாக்கப்பட்டு பெரும்பாலானோருக்கு கிடைத்துவிட்டது. அதை ஏறத்தாழ அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அடிப்படை உரிமைஅளவிற்கு வருகிறது. நூறு ரூபாய் வரையில் காய்ன்களை கொணர்ந்து நோட்டுக்களை வெளியேற்றிவிடலாம். கறுப்புப்பணம் என்பது அரசியல்வாதிகள் பெருமுதலாளிகளிடம் இருப்பதைவிட பொதுமக்களிடம் குறிப்பாக சிறு வணிகர்களிடம் பலமடங்கு இருக்கிறது, இவர்கள் தான் அறுபது லட்சம் வரையிலான வீடு மனைகளை கருப்பில் வாங்கி குவிக்கிறார்கள் அதனால் கூலிவேலை செய்யும் தொழிலாளிகளுக்கு சிலலட்சங்களில் கிடைக்கவேண்டிய வீட்டுமனைகள் எட்டாக்கனியாகிவிடுகிறது. கூலிவேலைசெய்வோருக்கும் வங்கி மூலம் சம்பளமென்றால் அவர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்பு ஏற்படும், அன்றாட கூலி என்பது தவிர்க்கப்பட்டு மாத ஊதியம் கிடைக்கும், குடும்ப வளர்ச்சியில் அவர்கள் கவனம் செலுத்தவும் குடிப்பழக்கம் குறையவும் வாய்ப்புண்டு. UK போல நம்நாடும் மாறட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
22-பிப்-202000:46:15 IST Report Abuse
Vena Suna அந்த பயம் இருக்கட்டும்...
Rate this:
Share this comment
Cancel
21-பிப்-202020:23:18 IST Report Abuse
ஆப்பு அப்பிடியே வேலூருக்கு மேற்கே , மற்றும் பெங்களூரில் 10 ரூவா நாணயத்தை வாங்க மாட்டேங்குறாங்க. அது ஏன்னு துப்பறிஞ்சு கண்டுபிடுச்சு விளக்ஜம் குடுங்க வங்கி ஊழியர் சங்க தலைவரே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X