பொது செய்தி

தமிழ்நாடு

சிஏஏ., இந்தியர்களுக்கு எதிரானதல்ல: துணை ஜனாதிபதி.

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
caa, kashmir, 370article, citizenshipamendmentact, vicepresident, venkiahnaidu, venkiah, vicepresidentvenkiah, சிஏஏ, குடியுரிமைதிருத்தசட்டம், வெங்கையா, துணைஜனாதிபதி, துணைஜனாதிபதிவெங்கையா, வெங்கையாநாயுடு, காஷ்மீர்,

இந்த செய்தியை கேட்க

கோவை: குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) இந்தியர்களுக்கு எதிரானது இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

கோவை வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது வெங்கையா நாயுடு பேசியதாவது: நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் 100 சதவீத கல்வியறிவு பெற முடியவில்லை. விவாத கலாசாரத்தை தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஊக்குவிக்கிறது. அதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறது. காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, முத்தலாக் ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவை பார்லிமென்டில் விவாதத்திற்கு பின்பு நிறைவேற்றப்பட்டன. குடியுரிமை இந்திய மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சட்டம், இந்திய குடியுரிமையை எதுவும் செய்யாது.

கோவை, பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார். மாணவ, மாணவிகளிடையே பேசிய அவர், விவாத கலாசாரத்தை தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஊக்குவிக்கிறது. அதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறது என்றார். 370 சட்ட பிரிவு நீக்கம் ; முத்தலாக், சி.ஏ.ஏ.,போன்றவை விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன. சி.ஏ.ஏ., இந்திய மக்களுக்கு எதிரானதல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. இதில் அந்நிய நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசினார்.


latest tamil news


அண்டை நாடுகளில், மதரீதியாக துன்புறுத்தப்படுபவர்களுக்காக கொண்டு வரப்பட்டது. சட்டத்தை முதலில் படித்து, புரிந்து கொண்டு அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்யுங்கள்.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தற்காலிகமாக தான் வழங்கப்பட்டது. அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில், அன்னிய நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது.

தாய், தாய்நாடு, தாய்மொழி ஆகியவற்றை ஒரு போதும் மறக்கக் கூடாது. வீடுகளில் தாய்மொழியில் மட்டும் பேசுங்கள். வெளிநாட்டு மொழியில் ஏன் பேச வேண்டும். அம்மா என்ற அழகான வார்த்தை இருக்க, எதற்காக 'மம்மி, டாடி' என்று குழந்தைகளை பெற்றோர்கள் அழைக்க சொல்ல வேண்டும். எத்தனை மொழி கற்றாலும் தாய்மொழியை மட்டும் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-பிப்-202007:58:48 IST Report Abuse
பேசும் தமிழன் அயல் நாட்டில் மத துவேசத்தால் பாதிக்கப்பட்ட \ அகதிகளாக வரும் மக்களுக்கு தான் ஆதரவு அளிக்க முடியும் ...அயல் நாட்டில் மத பெரும்பான்மையாக இருக்கும்.கலவரம் செய்தவன் ...நம் நாட்டிலும் கலவரம் செய்யும் நோக்கில் அகதிகளோடு கூட சேர்ந்து வந்தால் அவனுக்கு எப்படி ஆதரவு கொடுக்க முடியும் ....அது தான் இநத சட்டம்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
21-பிப்-202019:51:49 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     துணை ஜனாதிபதி பதவி நன்றி விசுவாசத்துக்காக மக்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளை கொச்சைப்படுத்தாதீர்கள்.வாழ்வுரிமைக்காக வீதியில் வந்துதான் போராட வேண்டும்.வீட்டுக்குள்ளே போராடினால் விஷயம் வெளி வருமா?? 2
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
21-பிப்-202019:45:54 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு CAA வால் இந்தியாவில் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது அப்புறம் என்னத்துக்கு இந்த சட்டம் போட்டீங்க அப்படியே இப்போ உள்ளது போல இருக்கும் என்று சொல்லுகிறீர்கள் அப்ப எதற்கு சட்டம் இதை விட்டு விட்டு உருப்படியா நாட்டை முன்னேற்ற பாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X