'பிரதமர் பீஹாரி உணவை சாப்பிட்டதால் பலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டுள்ளது'

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
பிரதமர், பீஹாரிஉணவு, நெஞ்செரிச்சல்,சுஷில்மோடி

பாட்னா: “பிரதமர் மோடி, பீஹாரின் பாரம்பரிய உணவான 'லிட்டி சோக்காவை' உண்டது, பலருக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தியுள்ளது,” என, மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறினார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், டில்லியில், கண்காட்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, பீஹாரின் பாரம்பரிய உணவான லிட்டி சோக்காவை உண்டார்.

இந்நிலையில், பீஹாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் இளைய மகனும், எம்.எல்.ஏ.,வுமான தேஜஸ்வி யாதவ், 'டுவிட்டர்' பதிவில் கூறியிருந்ததாவது:பீஹாரின் சுவையான உணவை விரும்பிய பிரதமருக்கு என் நன்றிகள். மாநில முதல்வரால், உங்களிடம் எதுவும் கேட்கமுடியாது என்பதால், நான் உங்கள் கவனத்திற்கு சிலவற்றை கொண்டுவர விரும்புகிறேன். பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு தொகுப்பு நிதி, வெள்ள நிவாரண நிதி, 'ஆயுஷ்மான் பாரத்' திட்ட நிதி ஆகியவை தருவது, பல காலமாக நிலுவையில் உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டு இருந்தது.

இதேபோல், லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'லிட்டி சோக்காவை நீங்கள் உண்ணலாம். ஆனால், மாநில மக் கள், நீங்கள் செய்த துரோகத்தை என்றும் மறக்கமாட்டார்கள்' என கூறியிருந்தார்.

இந்நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., மூத்த தலைவரும், துணை முதல்வருமான சுஷில் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:பிரதமர் சாப்பிட்ட உணவு, பலருக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மாநில பாரம்பரிய உணவை, அனைத்து இடங்களுக்கும் கொண்டுசேர்ப்பது குறித்து, பாட்னாவில் உள்ள விவசாயிகளுடன், மாநில அரசு அதிகாரிகள் கலந்துரையாடினர். அதே நாளில், டில்லி யில் பிரதமர் மோடி, லிட்டி சோக்கா உணவை உண்டார். அது, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அமைந்தது. இவ்வாறு, அதில் கூறியிருக்கிறார்.


பிரசாந்த் கிஷோரின் பிரசாரம் துவக்கம்


ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீஹாரை சிறந்த மாநிலமாக உருவாக்க, 'பாட் பீஹார் கி' என்ற பிரச்சாரத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக, மாநில வளர்ச்சிக்கு, கிஷோருடன் இணைந்து பணியாற்ற விரும்பும் இளைஞர்களை சேர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கிடையில், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மஞ்சி மற்றும் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா ஆகியோரை, பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-பிப்-202017:10:26 IST Report Abuse
Ramesh R வட்டி கோவிந்தன் ரஜினி வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-பிப்-202015:52:28 IST Report Abuse
Endrum Indian ஒரு பிரதமர் இவ்வளவு சாதாரண மனிதனாக லிட்டி சோக்கா உணவை உண்டார். அது, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அமைந்தது. நிஜமாகவே மனம் திறந்து அவரை பாராட்ட வேண்டும் இவ்வளவு சாதாரண மனிதராக அவர் அங்கு உணவு உண்ட விதம்.
Rate this:
Share this comment
Cancel
22-பிப்-202010:58:13 IST Report Abuse
தமிழ் தேஜஸ்விக்கு நெஞ்சு எரிச்சல் இருக்கட்டும். நியாயமாக நீங்கள் கேட்கவேண்டிய சிறப்பு தொகுப்பு நிதி, நிவாரண நிதி போன்றவற்றை அவர் கேட்டுவிட்டதால் உங்களுக்கு உடம்பெல்லாம் எரியுதுபோல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X