பொது செய்தி

இந்தியா

பழைய பேருந்துகளில் பெண்களுக்கான கழிப்பறைகள்

Added : பிப் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 பழைய பேருந்துகளில்  பெண்களுக்கான கழிப்பறைகள்

புனே,: புனேவில், பழைய பேருந்துகளை சீரமைத்து, அவற்றில் பெண்களுக்கான கழிப்பறைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த நடமாடும் கழிப்பறைகள், பொது இடங்களில் நிறுத்தப்படுகின்றன.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, புனேவில், பணிக்குச் செல்லும் பெண்கள், கல்லுாரி மாணவியர் உள்ளிட்டோர், பொது இடங்களில் கழிப்பறை வசதியின்றி அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தனியார் நிறுவனம் ஒன்று, பழைய பேருந்துகளை வாங்கி கழிப்பறைகள் அமைத்திருக்கின்றன.இந்த நடமாடும் கழிப்பறை, நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கிறது. இதில், கழிப்பறைகளுடன், பாலுாட்டும் தாய்மார்களுக்கான பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.

கழிப்பறையினை, 5 ரூபாய் செலுத்தி பயன்படுத்துவதுடன், 'சானிடரி நாப்கின்' மற்றும் குழந்தை களுக்கான 'டயபர்களை'யும் இதில் பெற்றுக் கொள்ளலாம். பேருந்தின் மேல் பகுதியில் உள்ள, சூரிய சக்தி மின்சார பேனல்கள், கழிப்பறைக்கான மின்சாரத்தை தருகின்றன. இந்த பேருந்து கழிப்பறைகளுக்கு, பெண்களிடம் சிறப்பான வரவேற்பு உள்ளது. இந்த நடமாடும் கழிப்பறையை பயன்படுத்திய இளம்பெண் ஒருவர், 'கழிப்பறை, மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai ,இந்தியா
26-பிப்-202004:32:25 IST Report Abuse
Krish நல்ல திட்டம். கடற்கரை கோவில் விழா காலங்களில் தேவை படும். சுகாதாரமாக டிஸ்போசல் செய்வதும் எளிதாக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
24-பிப்-202012:15:52 IST Report Abuse
karutthu பொது இடங்களான பஸ் ஸ்டாண்டு ,ரயில் நிலையம் போன்ற இடங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்ட வசதி செய்து கொடுத்தது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சாதனை .. பாராட்டப்படவேண்டிய ஒன்று ......
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-பிப்-202013:47:58 IST Report Abuse
Bhaskaran நமது ஊரிலும் பின்பற்றலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X