பொது செய்தி

இந்தியா

'ஆப்பரேஷன் மா' நடவடிக்கையால் காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்தது

Updated : பிப் 23, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஆப்பரேஷன்மா, நடவடிக்கை, காஷ்மீர், பயங்கரவாதம்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், ராணுவம் மேற்கொண்ட, 'ஆப்பரேஷன் மா' நடவடிக்கையால், பயங்கரவாத அமைப்பில் இளைஞர்கள் சேர்வது குறைந்து, பயங்கர வாதமும் குறைந்துள்ளது.

இது பற்றி ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இளைஞர்கள், பயங்கரவாத அமைப்பில் சேருவதை தடுக்கவும், சேர்ந்த இளைஞர்களை மீட்கவும், ஆப்பரேஷன் மா நடவடிக்கையை, ஜம்மு - காஷ்மீரில் ராணுவம் துவக்கியது.பயங்கரவாதிகள் எங்காவது பதுங்கியிருப்பது தெரிந்தால், பாதுகாப்பு படையினர், 'என்கவுன்டர்' நடத்துவர்.

அதில் சிக்கியிருக்கும் உள்ளூர் பயங்கரவாதி பற்றிய தகவல் தெரிந்தால், அந்த இடத்துக்கு, அவரது தாய் அல்லது குடும்பத்தினரை அழைத்து வந்து பேச வைப்போம்.அவர்கள், பயங்கரவாதி யின் மனதை மாற்றுவர். நாங்கள், என்கவுன்டரை பாதியிலேயே நிறுத்திவிட்டு, அந்த பயங்கரவாதி, குடும்பத்துடன் இணைய வாய்ப்பு அளிப்போம். அதனால், இந்த நடவடிக்கைக்கு, ஆப்பரேஷன் மா என பெயர் வைத்தோம்.இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

பல இளைஞர்கள, பயங்கரவாதத்தை கைவிட்டு, மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளனர். ராணுவத்தின் இந்த நடவடிக்கையால், பயங்கரவாத அமைப்பில் இளைஞர்கள் சேருவது குறைந்துவிட்டது; பயங்கரவாதமும் குறைந்துள்ளது.முன்பெல்லாம், கொல்லப்பட்ட பயங்கர வாதியின் இறுதி ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். இப்போது, 100க்கும் குறைவானவர்கள், அதிலும் அவரது குடும்பத்தினர் தான் பங்கேற்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-பிப்-202009:21:59 IST Report Abuse
ஆரூர் ரங் முன்பெல்லாம் காஷ்மீர் மூர்க்க பயங்கரவாதிகள் கட்டிடங்களில் ஒளிந்திருந்தால் உள்லே புகுந்து ரிஸ்க் எடுத்து சுடுவர். இப்போதெல்லாம் கட்டிடததையே தாக்கி அழித்து பாடம் புகட்டுகின்றனர் .இதனால் வீரர்களின் மரணம் குறைகிறது. அமித்ஷாவின் ஐடியாவாம்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
22-பிப்-202006:55:59 IST Report Abuse
blocked user பயங்கரவாதம் செய்தவர்கள் மீது அன்பு காட்டுவது சரியல்ல - அப்பாவிகளின் உயிரை எடுக்க துணிந்தவர்கள் மனிதர்களாகவே இருக்கமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X