சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : பிப் 21, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: தேசிய மக்கள்தொகை பதிவேட்டில், அப்பா, அம்மா, பாட்டி பெயரெல்லாம் கேட்கின்றனர். ஒன்றும் கொடுக்கவில்லை என்றால், நீ என்ன பண்டிகை கொண்டாடுகிறாய் என்று கேட்கின்றனர். தீபாவளி, பொங்கல் என்றால் விட்டுவிடுகின்றனர். ரம்ஜான், பக்ரீத் என்றால், விட மாட்டார்கள்.

'டவுட்' தனபாலு: தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி, ஏப்ரலில் தான் துவக்கப்பட உள்ளது. அதில் என்னென்ன கேள்விகள் இருக்கும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதற்குள், இப்படியொரு தகவலை, தைரியமாக சட்டசபையில் கூறுகிறீர்களே; இவ்வாறு கூறி, எதிர்ப்பு போராட்டத்தை அணையாமல் பார்த்துக் கொள்வது தான் உங்கள் எண்ணம் என்பது, 'டவுட்'டே இல்லாமல் புரிகிறது.


புதுச்சேரி காங்., முதல்வர் நாராயணசாமி: தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை, மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது; அதை, தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த, 500 சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள், புதுச்சேரியில் தொழில் துவங்க விருப்பம் தெரிவித்துள்ளன. அவற்றுக்கு நிலம் வழங்க, நாங்கள் தயாராக உள்ளோம்.

'டவுட்' தனபாலு: டாடாவின், 'நானோ' கார் தொழிற்சாலைக்கு, மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததும், குஜராத் மாநிலம் இரு கை கூப்பி அழைப்பு விடுத்து, தொழிற்சாலையை அங்கு துவங்கச் செய்தது. அதுபோல, தமிழகத்தில் எதிர்க்கட்சிகளால் தடுக்கப்படும் தொழிற்சாலைகளை, புதுச்சேரிக்கு கொண்டு வந்து விடுவீர்களோ என்ற, 'டவுட்' இதன் மூலம் ஏற்படுகிறது.

பத்திரிகை செய்தி: மதுரை கிழக்கு மாவட்ட ம.தி.மு.க., செயலர் மாரநாடுவை, மதுரை வடக்கு புறநகர் மாவட்ட செயலரும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான மூர்த்தி, தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். அதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாரநாடு, வைகோவிடம் புகார் தெரிவித்துள்ளார். மூர்த்தியை பார்த்து, 'நீங்கள் என்ன, ஸ்டாலினை விட பெரியவரா; எங்கள் மாவட்ட செயலரிடம் மரியாதையாக நடக்காமல், அநாகரிகமாக நடந்துள்ளீர்கள்' என, வைகோ, 'செம டோஸ்' விட்டுள்ளார்.

'டவுட்' தனபாலு: தன் கட்சியினருக்கு ஒன்று என்றால், வைகோ பொறுத்துக் கொள்ள மாட்டார் என்பது, தமிழகம் அறிந்த உண்மை. எனினும், இரு கட்சிகளின் தலைவர்களுக்கும், சாதாரண தொண்டர்களுக்கும் இடையே துவக்கத்திலிருந்தே உரசல் இருந்து வருவது, இந்த நிகழ்ச்சியின் மூலம், 'டவுட்' இல்லாமல், அம்பலம் ஆகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
22-பிப்-202018:54:05 IST Report Abuse
karutthu தமிழ் நாட்டில் இனி எந்த தொழிற்சாலைகளையும் வரவிடமாட்டார்கள் ......அதே சமயம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லை என கூறுவார்கள் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆளும் கட்சியும் நமக்கென்ன மக்கள் விரும்பவில்லை என பழியை போட்டு நாங்கள் மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என ஆளுங்கட்சி தப்பித்துக்கொள்கிறது .
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
22-பிப்-202017:40:30 IST Report Abuse
Suppan இணைவி, துணைவி "சிநேகிதி" பெயர்களையெல்லாம் கேட்டால்தான் உங்கள் கட்சி ஆட்களுக்கு சங்கடம்
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
22-பிப்-202015:38:31 IST Report Abuse
Abdul Rahman பொய் தகவல்களை பரப்பும் சட்டத்தில் துரை முருகனை கைது செய்ய முடியாதா? மாநில அரசு தூங்குகிறதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X