சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அ.தி.மு.க., தொண்டர்களின் எதிர்பார்ப்பு!

Added : பிப் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 அ.தி.மு.க., தொண்டர்களின் எதிர்பார்ப்பு!

அ.தி.மு.க., தொண்டர்களின் எதிர்பார்ப்பு!

சொ.கவிச்செல்வம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில், ஒரு நபர் கமிஷனை, தமிழக அரசு அறிவித்தது.ஆறுமுகச்சாமி கமிஷன், வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, உண்மை தன்மையை விளக்கும் என, அ.தி.மு.க.,வின் உண்மை நிர்வாகிகள், ஜெயலலிதாவின் விசுவாசத் தொண்டர்கள் உள்ளிட்டோர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.கமிஷன் துவக்கப்பட்ட நாள் முதல், உச்ச நீதிமன்ற உத்தரவு வரை, கமிஷனுக்கு, ஆறு முறை கால நீட்டிப்பு வழங்கி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இது வரை, உண்மை நிலையை கண்டறிய, ஆறுமுகச்சாமி தலைமையிலான ஒரு நபர் கமிஷனால் முடியவில்லை.ஜெ., மறைந்து, மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள், இதுவரை அவிழ்க்கப்படவில்லை. ஜெயலலிதா ஆட்சி நடைபெற்று வருவதாக, 'தம்பட்டம்' அடித்துக் கொள்ளும் முதல்வர், அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர், இந்த விசாரணையை தீவிரப்படுத்தி, உண்மையை வெளிக் கொணரும் ஆர்வம் இல்லாமலும் உள்ளனர்.'ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள மர்மத்தை கண்டறிய, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் கமிஷன், கண் துடைப்பு நாடகம்' என, எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.ஒரு நபர் கமிஷனில் பணியாற்றும் கமிஷனர், செயலர் மற்றும் அலுவலர்களின் சம்பளத்தை பட்டுவாடா செய்வதற்காகவே, கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளதோ என, எண்ணத் தோன்றுகிறது.ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள மர்மம் விலகுமா, ஏழு மாதங்களாக முடங்கியிருக்கும் கமிஷன், 'வீறு' கொண்டு எழுமா, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமியின் விசாரணை தொடருமா என்ற கேள்விகள் இன்னும் எதிரொலித்து கொண்டே இருக்கின்றன.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இம்மாதம், 24க்குள் மணிமண்டபத்தை திறப்பதில் காட்டும் அவசரத்தையும், ஆர்வத்தையும், அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிவதிலும் காட்ட வேண்டும்; இதுவே, உண்மையான, அ.தி.மு.க., தொண்டர்களின் எதிர்பார்ப்பு!


ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளின்கடமை இது தான்!

ப.-விஜய், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 1969க்கு பின், பத்திரப் பதிவுத் துறையிலும், சாலைப் போக்குவரத்து அலுவலகங்களிலும் புகுந்தலஞ்சமும், ஊழலும்,மெல்ல மெல்லமுன்னேறியது.இன்று, பொதுப்பணி, வருவாய், வணிக வரி, ஊரக வளர்ச்சி, மின்சாரம் என, அனைத்துத் துறைகளிலும் புரையோடி, தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் வரை, வளர்ந்து பயமுறுத்துகிறது; அரசை நடத்துவோர், நேர்மையை தவற விட்டு, தடம் புரண்டு விடுகின்றனர்.

இத்தருணத்தில், தி.மு.க.,வின் வெற்றி வியூகத்திற்கு, பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த எதிர்ப்பை சமாளிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 100 பேரை களமிறக்கப் போகிறதாம், அ.தி.மு.க., அரசு.'அரசு பணியில் இருப்போர், கட்சி சார்புடன் செயல்படக் கூடாது' என்பது, அரசின் விதி; இது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் பொருந்தும்.மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம்பெறும் உயர்நிலை அலுவலர்களான இவர்கள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட போவதான அறிவிப்பு, உண்மையில் அச்சத்தை வரவழைக்கிறது.ஊராட்சி தேர்தலிலேயே, பல இடங்களில் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட, ஐ.ஏ.எஸ்.. அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை; இதற்காக, பலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாக செய்தி வந்துள்ளது.ஆளுங்கட்சிக்குச் சாதகமாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் செயல்படுவதால், செத்துக் கொண்டிருக்கும் ஜனநாயகம், முழுதாக உயிரை விட்டு விடாதா?நீதிமன்றங்களின் மீதுள்ள நம்பிக்கையில் தான், ஓரளவாவதுமக்கள் அமைதியுடன்வாழ்கின்றனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கட்சி சார்புடன்செயல்பட ஆரம்பித்தால்,மக்கள் என்ன செய்வர்.அந்நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் கடமை!


போராட்டநாடகங்களுக்குமுடிவு தேடணும்!

சி.இரா.குப்புசாமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.மாவட்டத்திலிருந்துஅனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இஸ்லாமிய நாடுகளான, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில், பெரும்பான்மை மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். பின், இந்தியாவில் அகதிகளாக வந்துசேர்ந்துள்ளனர். ஹிந்துக்கள், கிறிஸ்துவர்,சீக்கியர், பவுத்தர், ஜைனர் போன்றோருக்குகுடியுரிமை வழங்கவே, இச்சட்டம் வகைசெய்கிறது. இது தவிர, இந்தியாவில் ஏற்கனவே வசித்து வரும் முகலாயமக்களையோ, வேறு எந்த சிறுபான்மை மக்களையோ, குறி வைத்து இச்சட்டத்தில் ஷரத்துக்கள் ஏதும் கிடையாது.இதை அறியாததால், தி.மு.க., உள்ளிட்டகூட்டணி கட்சிகள்வெத்துப் போராட்டங்களை நடத்திவருகின்றன.தி.மு.க.,வின் வட்ட, மாவட்ட அளவிலானநிர்வாகிகள் கூட, ஏன் எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு கூட, குடியுரிமைதிருத்த சட்டத்தின்அடிப்படை தெரியாதா?இவர்களெல்லாம் பொதுமக்களிடம், இச்சட்டத்திற்கு எதிராக, கையெழுத்து கேட்பதற்கு என்ன தகுதிஇருக்கிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மருத்துவராக இருந்த வரதராஜன் என்பவர், ஒருமுறை ம.தி.மு.க., சார்பில், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டவர்.இப்படிப்பட்ட, நுனிப்புல் மேயும் நிர்வாகிகளை வைத்து, கூட்டணிகட்சிகளுடன் பேச்சுநடத்திக் கொண்டிருக்கும்,தி.மு.க., தலைவர் கூட, இச்சட்டத்தின் ஷரத்துகளின் அடிப்படையை முதலில் தெரிந்துகொள்ளட்டும்.நாட்டின் ஸ்திரத் தன்மையிலும், இறையாண்மை காக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, உச்ச நீதிமன்றம் செயல்பட வேண்டும்.இவ்விஷயத்தை உடனடியாக கணக்கில் எடுத்து, எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்ட நாடகங்களுக்கு, முடிவுகாண முன் வர வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
22-பிப்-202018:45:05 IST Report Abuse
karutthu இந்த ஆணையம் வர காரணமாக இருந்தவர் துணை முதல்வர் ஓ பி எஸ் அவர்கள் தான் .ஆனால் அவர் ஏன் கண்டுக்காமல் இருக்கிறார் என தெரியவில்லை ??? நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருகிறோம் அதிமுக தலைவர்கள் ,அமைச்சர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை அது அவளவுதான் போலிருக்குது
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-பிப்-202016:02:21 IST Report Abuse
D.Ambujavalli புகார் கொடுத்த ‘தியானேஸ்வரனே ‘ சம்மன்களை அலட்சியப்படுத்தி, அம்மாவின் மரணத்தை மூடி வைத்து, வெட்டிக்கொண்டவருடன் ஒட்டிக்கொண்டு விட்டார். விசாரணை, இயற்கை முடிவை எய்திவிட்டது
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
22-பிப்-202013:10:40 IST Report Abuse
Anantharaman Srinivasan ஆறுமுகசாமி கமிஷன். உண்மை கடைசிவரை வெளிவராது. அந்தமாதிரி ஒரு டை அப். இது பலநாட்களாக அமுக்கி வைக்கப்பட்டு இருக்கும் சங்கதி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X