பொது செய்தி

தமிழ்நாடு

உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்

Updated : பிப் 21, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

'ஒரு பசு மாடும், ஒரு முருங்கை மரமும் இருந்தால் போதும்; ஏழை வாழ்ந்து விடலாம்' என, கிராமத்தில் பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால், இன்றைய கிராமத்துக் குழந்தைகள் கூட, பாக்கெட் பாலை நம்பி இருக்கின்றன. பால், வணிகப் பொருளாக மாறி விட்ட பின், பால் கறக்காத மாடுகளும் கைவிடப்படுகின்றன. அப்படி கைவிடப்பட்ட மாடுகளுக்கு, மறுவாழ்வு அளிக்கும் பணியை செய்து வருகிறார் டாக்டர் சாதனா ராவ், 75. அவரிடம் பேசியதிலிருந்து...latest tamil news

எவ்வளவு ஆண்டுகளாக பசுக்களை பராமரிக்கிறீர்கள்?

பசுமாடுகளைப் பராமரிக்கும் பணியில், 45 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன்.டாக்டரான நீங்கள், பசுக்களை ஆதரிக்க காரணம்?எங்கள் குடும்பம், காஷ்மீரை பூர்வீகமாக கொண்டது. சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வீட்டில், எங்கள் தாத்தா மாடுகளை வளர்த்தார்.அதனால், சிறு வயதிலிருந்தே, எனக்கு மாடுகளின் அறிமுகம் உண்டு. பின், மருத்துவம் படித்தேன்.

ஒருநாள், எங்கள் வீட்டுப் பக்கமாக வந்த, காஞ்சி மகா பெரியவர், மாடுகளுக்கு ஆசி வழங்கிச் சென்றார். அப்போது தான், மாடுகளின் மீது பிரியம் ஏற்பட்டது. ஒருநாள், அவர் என்னிடம், 'நீ பசுக்களை வளர்க்க வேண்டும்' என்றார். அவரின் அருளாசியாக ஏற்று, பசுக்களை வளர்த்து வருகிறேன்.


latest tamil newsபசுக்களை எங்கு பராமரிக்கிறீர்கள்?திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள, வெங்கடாபுரத்தில், 4 ஏக்கரில், எங்களின், 'இந்திய கால்நடை பராமரிப்பு மையம்' செயல்பட்டு வருகிறது. இங்கு, 800க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும், கறவை நின்ற பசுக்கள், கால் ஒடிந்த, வயதான காளைகள் தான் அதிகம். அவற்றில், 1 சதவீதம் மட்டுமே, கறக்கும் மாடுகள் உள்ளன. இவற்றுடன், ஆடுகளும், நாய்களும் கூட உள்ளன.
பசுக்களை பராமரிப்பதை, குல வழக்கமாகக் கொண்டுள்ள, சமண சமயத்தைச் சார்ந்த சுரானா குடும்பத்தினர் தான், இந்த இடத்தைக் கொடுத்து, மாடுகளைகாப்பாற்றினர்.


கொஞ்சம் விளக்கமாக...சென்னை, மயிலாப்பூரில் இருந்து, மாடுகள் காப்பகத்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, நீலாங்கரையில் இடம் தந்தனர். அங்கிருந்து அகற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, இங்கும் நிலம் கொடுத்து உதவியவர்கள், அவர்கள் தான். இவற்றை பராமரிக்க, 64 பணியாளர்கள் உள்ளனர்.


உங்கள் காப்பகத்தின் நிலை?மாதம், 8 லட்சம் ரூபாய் வரை, பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கிறோம். மருத்துவச் செலவுக்கு, 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. மற்றபடி உணவு உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து, ஒவ்வொரு மாதமும், 16 லட்சம் ரூபாய் வரைசெலவாகிறது.


இவ்வளவு தொகையை செலவு செய்ய உங்களால் எப்படி முடிகிறது?

ஒவ்வொரு மாதமும், கஷ்டமாகத் தான் உள்ளது. ஆனால், காஞ்சி மகா பெரியவர், என்னை மாடு வளர்க்கச் சொன்ன போது, 'டாக்டரான நான், வேலையை விட்டு விட்டால், நான் எப்படி செலவு செய்வது?' எனக் கேட்டேன். அவர், 'தாகம் ஏற்படும் போது, தண்ணீர் கிடைத்தே தீரும்' என்றார். அதன்படியே, இதுவரை, பசுக்களைப்பராமரிக்கத் தேவையான நிதியை, ஆர்வலர்கள் வழங்கிவருகின்றனர்.


பசுக்களை எப்படி பராமரிக்கிறீர்கள்?தினமும், தவிடு, பொட்டு, புல், வைக்கோல், வைட்டமின் சத்துக்கள் வழங்கி வருகிறோம். மாடுகளை, தினமும் குளிப்பாட்டி, தேவையான பராமரிப்புகளை செய்கிறோம்.அத்துடன், கால்கள், வால்கள் வெட்டப்பட்ட நிலையில், சாலையில் கிடக்கும் மாடுகள், கைவிடப்பட்ட காளைகள், எருமைகள், அடிமாட்டுக்காக கடத்தப்பட்டு, 'புளூ கிராஸ்' அமைப்பால் மீட்கப்படும் மாடுகள், தீ விபத்தால் பாதிக்கப்படுபவை என, பலவிதமான பாதிப்புகளுடன், கால்நடைகள் இங்கு வருகின்றன.

அவற்றால், இங்குள்ள கால்நடைகளுக்கு, நோய்த்தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக, கால்நடை மருத்துவர் பிரியா, அவற்றை பரிசோதிப்பார்; தேவையான ஊசி, மருந்துகளை வழங்கபரிந்துரைப்பார்.அவர் ஆலோசனைப்படி, தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து, அவற்றை காப்போம். ஈன்ற பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கூட, மருத்துவ உதவி தேவைப்படும்.


இவ்வளவு சிரமங்களுக்கும், உங்களின் ஆன்மிகப் பற்று தான் காரணமா?

இந்த பணி செய்வதற்காக, எந்த சிரமமும் படவில்லை. முழு மகிழ்ச்சியுடனும், ஈடுபாட்டுடனும் தான் செய்கிறேன். ஆனாலும், போதிய நிதி இல்லாமல், அவ்வப்போது கஷ்டப்பட வேண்டி உள்ளது.அதேபோல், தற்போது தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளது. ஆனாலும், எனக்கு, காஞ்சி மகா பெரியவர், கஞ்சன்காடு ஆனந்த ஆசிரமம் பப்பா ராமதாஸ் சுவாமிகள், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் அன்னை ஆகியோரின் ஆசி, எனக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது.

அதனால், கடந்த கோடையில், உள்ளூர் மக்களே, வறட்சியிலிருந்து மாடுகளைக் காக்கத் தேவையான உதவிகளை செய்தனர். இப்படி, மலை போல் வரும் சிரமங்கள் எல்லாம், பனி போல் மறைந்துவிட, என், ஆன்மிக ஈடுபாடு தான் காரணம்.


இதில் பொதுமக்கள் ஆர்வம் எவ்வாறு உள்ளது?

சென்னையில் இருந்தபோது, ஆன்மிகப் பற்றுள்ளோர், பிறந்த நாள், திருமண நாள், புதுமனைப் புகுவிழா உள்ளிட்டவற்றுக்கு, கோ பூஜை செய்வர். அப்போது, பசுக்களுக்குத் தேவையான தீவனம் அல்லது ஒரு மாத தீவனத்துக்கான தொகையை கொடுப்பர்.


பசு பராமரிப்பில் மக்கள் நம்பிக்கை எந்தளவு உள்ளது?

இல்லை. மக்கள் எளிதில் அணுகும் இடத்தில் நாங்கள் இல்லை; அது தான் காரணம். பொதுவாக, சமண சமயத்தவர்கள், தங்களின் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை, 'ஜீவோதயா' என்னும் தத்துவப்படி, பிராணிகளை காக்க செலவிடுவர்.

ஹிந்துக்கள், பாவங்கள் கழிய, பசுக்களுக்கு பசியாற்றி வழிபடுவர். பசுக்களை காத்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; வீட்டில் செல்வம் பெருகும் என்பது போன்ற நம்பிக்கைகள், ஹிந்துக்களிடம் உள்ளன. அது, இப்போதும் உள்ளது.அந்த நம்பிக்கை தான், இந்த கைவிடப்பட்ட கால்நடைகளைக் காக்கிறது. சக உயிர்களைக் காக்கும் நம்பிக்கையைத் தருவது நல்லது தானே!

சேவையைப் பாராட்டவும், கால்நடைகளைக் காக்கவும்ஆர்வமுள்ளவர்கள், உதவி செய்ய விரும்புவோர், இந்திய கால்நடை பராமரிப்பு மையநிர்வாகி, கமலா ராமமூர்த்தியை, 98404 56623 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
22-பிப்-202011:14:45 IST Report Abuse
அசோக்ராஜ் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. முஸ்லிம்களுக்கும் மழை கிடைப்பது கொடுமை.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-பிப்-202005:38:23 IST Report Abuse
 nicolethomson வணங்குகிறேன் , உண்மையாக விவசாயம் செய்வோருக்கு தெரியும் மாடுகளின் அருமை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X