டிரம்புக்கு கதர் ஜிப்பா: பொள்ளாச்சி தாத்தா பரிசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டிரம்புக்கு கதர் ஜிப்பா: பொள்ளாச்சி தாத்தா பரிசு

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (3)
Share
டிரம்ப், கதர்ஜிப்பா, பொள்ளாச்சி, தாத்தா, பரிசு, தாத்தாபரிசு, அதிபர்டிரம்ப், அமெரிக்கா,  இந்தியா,

பொள்ளாச்சி: இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, பொள்ளாச்சியைச் சேர்ந்த, 90 வயது முதியவர், தானே தைத்த கதர் ஜிப்பாவை, பரிசாக அனுப்பினார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, வேட்டைக்காரன் புதுாரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 90; தையல் கலைஞர். இவர், முன்னாள் முதல்வர் காமராஜர், பொள்ளாச்சி வந்த சமயங்களில், பல முறை கதர் சட்டை தைத்து தந்துள்ளார். காமராஜரும், அதை மகிழ்வுடன் அணிந்துள்ளார்.அதேபோல், முன்னாள் முதல்வர் ராஜாஜி உள்ளிட்ட பல தலைவர்களுக்கும், கதர் ஜிப்பா தைத்து பரிசளித்துள்ளார். பிரதமராக முதல் முறை, மோடி பதவியேற்ற போது, அவரை வாழ்த்தி, தன் கையால் கதர் ஜிப்பா தைத்து, தபாலில் அனுப்பி வைத்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியா வந்த போதும், கதர் ஜிப்பா அனுப்பினார். தற்போது, இளம்பெண்கள், இளைஞர்களுக்கு, விஸ்வநாதன் இலவச தையல் பயிற்சி அளித்து வருகிறார்.இந்நிலையில், பிப்., 24ம் தேதி, இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அன்பளிப்பாக வழங்க, தானே தைத்த கதர் ஜிப்பாவை, பதிவு தபாலில், அமெரிக்க துாதரகத்துக்கு அனுப்பினார்.

விஸ்வநாதன் கூறுகையில், இந்திய கலாசாரம், சுதந்திர போராட்ட வரலாறு, சுதேசி போராட்டத்தில் கதர் ஆடைகளின் பங்குஆகியவற்றை எடுத்துக் கூறும் வகையில், கதர் ஜிப்பா தைத்து, வெளிநாட்டு தலைவர்களுக்கு பரிசளிக்கிறேன். உடலில் தெம்பு உள்ள வரை, இதை தொடர்வேன் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X