ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் 52 பேராசிரியர்களுக்கு நிர்வாக பதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் 52 பேராசிரியர்களுக்கு நிர்வாக பதவி

Added : பிப் 21, 2020
Share

சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், 52 பேராசிரியர்களுக்கு, நிர்வாக பதவிகள் வழங்கப் பட்டுள்ளன.சென்னையில் செயல்படும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், துணைவேந்தராக பஞ்சநாதம், சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். பல்கலையின் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவிகள், நீண்டகாலமாக காலியாக உள்ளன. இந்த பதவிகளில், பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் கோவிந்தன் ஆகியோர், கூடுதல் பொறுப்பில் பணியாற்றுகின்றனர்.இந்நிலையில், பல்கலையின் நிர்வாக பதவிகளுக்கு பேராசிரியர், இணை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப் பட்டுள்ளன.பல்வேறு நிர்வாக பணிகளில், இயக்குனர், துணை இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த நியமனங்களுக்கு, பல்கலையின் சிண்டிகேட் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X