'நோ': வங்கி ஏ.டி.எம்.களில் இனி ரூ.2,000 நோட்டு வராது

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (23)
Advertisement
சென்னை: நாடு முழுவதும் உள்ள, ஏ.டி.எம்., இயந்திரங்களில், மார்ச், 1 முதல், 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்காது. 'ஏ.டி.எம்., இயந்திரங்களில், 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டாம்' என, வங்கி கிளைகளுக்கு, வங்கி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.கடந்த, 2016, நவ., 8ல், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய, 2,000, 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. முதலில், 2,000
நோ, வங்கி, ஏடிஎம் ரூ.2,000, நோட்டு,

சென்னை: நாடு முழுவதும் உள்ள, ஏ.டி.எம்., இயந்திரங்களில், மார்ச், 1 முதல், 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்காது. 'ஏ.டி.எம்., இயந்திரங்களில், 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டாம்' என, வங்கி கிளைகளுக்கு, வங்கி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

கடந்த, 2016, நவ., 8ல், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய, 2,000, 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. முதலில், 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த போது, அதற்கு சில்லரை கிடைக்க மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பின், 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

சமீப காலமாக, 2,000 ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து மறைந்து விட்டன. அரிதிலும் அரிதாகவே, ஏ.டி.எம்.,களில் கிடைப்பதாக, வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், 'ஏ.டி.எம்.,களில், 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டாம்' என, வங்கி கிளைகளுக்கு, அவற்றின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன் விபரம்: ஏ.டி.எம்.,களில், 2,000 ரூபாய் நோட்டுகள் தான் அதிகம் கிடைக்கின்றன. அவற்றுக்கு சில்லரை கிடைக்காமல், வங்கி கிளைகளில் மாற்ற, வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.இது, அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. குறைந்த மதிப்பு உள்ள ரூபாய் நோட்டுகளே, வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதாக உள்ளன.இதனால், ஏ.டி.எம்., இயந்திரங்களில், 2,000 ரூபாய் நோட்டுகள் நிரப்புவதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதில், 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் நிரப்பினால் போதும். இந்த உத்தரவு, மார்ச், 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தமிழகம் முதலிடம்

கடந்த, 2018ல், நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையில், குஜராத், தமிழகம் ஆகியவை முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்தன.

அதேசமயம், அந்தாண்டு, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதலில், தமிழகம் முதலிடத்தை பிடித்திருந்தது. 2.51 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கின. அடுத்த படியாக, மேற்கு வங்கத்தில், 1.92 கோடி ரூபாய், கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
22-பிப்-202015:45:47 IST Report Abuse
Loganathaiyyan அப்பாடி???இந்த ரெண்டாயிரத்தை நான் இது வரை பெட்ரோல் பங்குகளில் தான் கொடுத்து மாற்றிக் கொண்டிருந்தேன். இப்போ அந்த பிரச்சினை ஒழிந்ததா. நல்லது.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
22-பிப்-202019:18:16 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஅப்பட பணமதிப்பிழப்புன்னு சொல்லி புதுசா அச்சடிச்ச நோட்டை இனியுமச்சடிக்க காசில்லாமல் தவிச்ச தவிப்புக்கு ஒரு கும்பிடு என்ன இழவுக்கு இந்த புது நோட்டை கொண்டுவருவானே திரும்ப புடிங்கிக்குவானே? மைண்ட் வாய்ஸ். நிதியமைச்சர்......
Rate this:
Cancel
MANITHAN -  ( Posted via: Dinamalar Android App )
22-பிப்-202015:38:30 IST Report Abuse
MANITHAN ஆமாம் 2 ஆயிரம் புராவும் கருப்பு பண முதலைகளிடமும் ரெட்டிகளிடமும் மாட்டி கொண்டதோ?
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
22-பிப்-202014:50:29 IST Report Abuse
anbu அப்போ ஊழல் செய்து கருப்பு பணமாக பதுக்க முடியாதா?சுடலை & கோவுக்கு சோதனையான காலம் தான். ஏ சொக்கா ஏனிந்த நவீன தருமி குடும்பத்தை , அவங்க கூட்டாளிகளை இப்படி சோதிக்கிறாய்.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
22-பிப்-202019:25:33 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஎந்தக்காலத்துலையா இருக்கீங்க? நெறையா சினிமாபாப்பீங்களோ? இன்னமும் கட்டுக்கட்டா ருருபை நோட்டை அடுக்கி வச்சுக்கிட்டு திரியிறாங்களா? அடிச்ச மொத்த பணத்தையும் சின்னம்மா என்ன பண்ணுனாக ? வரலாறு அவசியம்... ஆமா, கருப்பு பணத்தை ஒளிப்பதுக்குத்தானே புது நோட்டு வந்துச்சு? கர்நாடக எலெக்ஷனில் குதிரை பேரம் கோடிகளில் நடந்துச்சு பத்திரிகையில் படிச்சேன்..….நீங்களும் கருப்பு பணம்ன்னு வேற பேசுதீங்க….அப்போ உண்மையிலே பணமதிப்பிழப்பு பிம்பிளிக்கி பிளாப்பித்தானா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X