சம்பவம் செய்தி

தமிழ்நாடு

19 பேரை பலி கொண்ட விபத்து: டிரைவருக்கு சிறை

Added : பிப் 21, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
19 பேரை பலி கொண்ட விபத்து: டிரைவருக்கு சிறை

திருப்பூர் அவிநாசியில் 19 பேர் பலியான விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரி டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டம் அவிநாசி பைபாஸ் சாலையில் கேரள அரசு பஸ் மீது கொச்சியில் இருந்து பெங்களூரு சென்ற கன்டெய்னர் லாரி மோதியதில் 19 பேர் பலியாகினர். லாரியை ஓட்டி வந்த பாலக்காடு ஒத்தப்பாலத்தைச் சேர்ந்த ஹேமராஜ் 38 தப்பியோடினார்.அவர் மீது வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் மாலை போலீசார் கைது செய்தனர்.ஹேமராஜ் 'கொச்சி துறைமுகத்தில் இருந்து லோடு ஏற்றி கட்டுப்பாடான வேகத்தில் இயக்கி வந்தேன். விபத்து ஏற்பட்டபோது என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

'லாரியிலிருந்து குதித்து விட்டேன். போலீசார் என்னைக் கைது செய்த பின்தான் இவ்வளவு பெரிய விபத்து நடந்தது தெரியும்' எனக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹேமராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொது கனரக சரக்கு வாகனம் இயக்குவதற்கான உரிமத்தை ஹேமராஜ் 2005ல் பெற்றார்.'மார்ச் 30ல் அவரது உரிமம் காலாவதியாக உள்ளது. அவரது உரிமத்தை ரத்து செய்யுமாறு பரிந்துரைத்து ஒத்தப்பாலம் போக்குவரத்து துறை அதிகாரிக்கு அறிக்கை அனுப்பப்படும்' என போலீசார் கூறினர்.
சடலம் ஒப்படைப்பு

விபத்தில் பலியான 19 பேரின் சடலங்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பிற்பகல் 12:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை பிரேத பரிசோதனை நடந்தது. 19 பேரின் சடலங்களும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.இதில் 15 பேரின் உடல்கள் நேற்று கேரளாவில் அடக்கம் செய்யப்பட்டன. காயமடைந்த எட்டு பேர் திருப்பூரில் உள்ள மூன்று தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏழு பேர் அவர்கள் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒருவர் மட்டும் இங்கு சிகிச்சை பெறுகிறார்.

கூடுதல் பாரமே விபத்துக்கு காரணம்

விபத்துக்கு காரணமான லோடு ஏற்றி வந்த 'பாரத் பென்ஸ்' கன்டெய்னர் லாரி 25 டன் எடையை சுமக்கும் திறன் உள்ளது. வாகன பாரம் 7 டன் சேர்த்து மொத்தம் 32 டன் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் 8 டன் கூடுதலாக 40 டன் எடையுடன் லாரி இருந்தது.மையத் தடுப்பை கடந்த மறு வினாடியே லாரி தனியாகவும் கன்டெய்னர் தனியாகவும் கழன்றுள்ளன. வேகமாக பிரிந்த கன்டெய்னர் எதிர் திசையில் வந்த பஸ்சின் இடது ஓரம் சாய்ந்து 10 மீட்டர் இழுத்து சென்று பஸ்சை அமுக்கியது. விபத்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருந்ததற்கு கூடுதல் எடையுடன் லாரி இருந்ததும் முக்கிய காரணம் என அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ. குமார் கூறியதாவது: விபத்து நடந்த இடம் 100 மீ. துாரம் வளைவு கொண்டது. அகலமான வளைவு என்பதால் கன்டெய்னர் வேகமாக வந்திருந்தாலும் சரியாக பிரேக் பிடித்திருந்தால் பாதிப்பு குறைந்திருக்கும்.அதிகாலை நேரம் துாக்க கலக்கத்தில் இருந்த டிரைவர் இடதுபுறத்துக்கு பதில் வலது புறத்தில் 'ஸ்டியரிங்'கை திருப்பி விட்டார். அடுத்த நொடியே தடுப்புச் சுவரை தாண்டி கன்டெய்னர் எதிர்சாலைக்கு சென்று விட்டது.அழுத்தம் குறைவாக இருந்ததால் முன்பக்க டயர்கள் தப்பின; பாரத்தை தாங்கியபடி இருந்த பின்பக்க இரண்டு டயர்களும் தடுப்பு சுவரில் மோதி அடுத்தடுத்து வெடித்து விட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
25-பிப்-202017:26:13 IST Report Abuse
S.P. Barucha வக்கீல்கள் கூட்டம் ஏன் இன்னும் வரவில்லை. இவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.மன நிலை பாதிக்கப்பட்டு இவன் சாகனும். எவ்வளவு கொடூரமான செயல், கவனமின்மை.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-பிப்-202000:46:48 IST Report Abuse
தமிழவேல் இதற்கு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கெடுபிடி செய்யவேண்டும்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-பிப்-202016:34:17 IST Report Abuse
skv srinivasankrishnaveni லாரி க்கு ஓனர் யாரு அவனும் காரணம் காசுக்குவேண்டி ஓவர் லோட் ஏற்றி இருக்கான் அவனையும் அரெஸ்ட் செய்யவேண்டும் போன உயிர்கள் போனதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X