அரசியல் செய்தி

தமிழ்நாடு

பட்ஜெட்டில் எல்லாரும் அதிருப்தி: ஸ்டாலின்

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 21, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
 பட்ஜெட், அதிருப்தி, ஸ்டாலின்

சென்னை: 'தமிழக அரசின் பட்ஜெட்டில், பொதுமக்கள் முதல் பொருளாதார நிபுணர்கள் வரை, தங்களின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க., தொண்டர்களுக்கு, அவர் எழுதிய கடிதம்:தமிழக அரசின், 10வது பட்ஜெட், யாருக்கும், எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது. பொதுமக்கள் முதல் பொருளாதார நிபுணர்கள் வரை, தங்களின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். மக்கள் நலனில் அக்கறையற்ற, அ.தி.மு.க., அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

தாய்மொழி நாளை யொட்டி, முதல்வர் விடுத்த அறிக்கையில், 'விழிபோல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்' என, எம்.ஜி.ஆரின் திரைப்பட பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதே எம்.ஜி.ஆர்., படங்களில் தான், 'ஏமாற்றாதே... ஏமாறாதே...' என்ற பாடல் வரியும், 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவர்...' என்ற, பாடல் வரிகளும் உள்ளன.

மக்களை ஏமாற்றுவதையே கொள்கையாக கொண்டிருக்கும் இந்த அரசு, அதே மக்கள் முன் பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கி வருகிறது. மக்கள் தான் மகேசர்கள்; எதையும் மறந்து விடவும் மாட்டர்கள்; ஏமாற்றுவோரை நிச்சயம் மாற்றுவர்; வெளியேற்றுவர்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-பிப்-202022:45:09 IST Report Abuse
மைனர்கோழி இரு காது வரைக்கும் காலர் வெச்சா எதிலுமே திருப்தி இருக்காது என்பது ஐதிகம்.
Rate this:
Share this comment
Cancel
dinesh - pune,இந்தியா
22-பிப்-202022:43:03 IST Report Abuse
dinesh உங்களுக்கு அதிருப்தியென்றால் உலகத்துக்கே அதிருப்தியா?
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
22-பிப்-202019:12:10 IST Report Abuse
Girija ஹூம் அஞ்சு வருஷத்து முன் அரசியலுக்கு வந்து மூன்று முறை முதல்வராகி விட்டார் கெஜ்ஜரி, எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார் என்று மூணு வருஷம் முழுசா ஓடிவிட்டது, கால் வெச்ச இடமெல்லாம் கரையான், நல்லா நடமாடிட்டு இருந்த பிள்ளை அரசியலே வேண்டாம், சாமியாராகிறேன் என்று கம்போடியாவுக்கு சென்றது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X