பொது செய்தி

இந்தியா

தொடர்ந்து ஏறுமுகத்தில் அன்னிய செலாவணி இருப்பு

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
  ஏறுமுகம்,  #அன்னிய செலாவணி இருப்பு

மும்பை : நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்திலும் தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது.கடந்த பிப்ரவரி, 14ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 47 ஆயிரத்து, 609 கோடி டாலராக உயர்ந்து, இதுவரை இல்லாத புதிய சாதனை உயரத்தை தொட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில், 33.80 லட்சம் கோடி ரூபாய். சமீப காலமாகவே தொடர்ந்து அன்னியசெலாவணி இருப்பு, புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. அந்த வரிசையில், கடந்த வாரத்திலும் அதிகரித்துள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:


latest tamil news



கடந்த, 14ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 309 கோடி டாலர் அதிகரித்து, 47 ஆயிரத்து, 609 கோடி டாலராக உயர்ந்து உள்ளது. இது, ஒரு புதிய சாதனை அளவாகும்.இதற்கு முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 170.1 கோடி டாலர் அதிகரித்து, 47 ஆயிரத்து, 300 கோடி டாலராக உயர்ந்திருந்தது.

மதிப்பீட்டு வாரத்தில் வெளிநாட்டு பணத்தின் மதிப்பு, 276 கோடி டாலர் அதிகரித்து, 44 ஆயிரத்து, 195 கோடி டாலராக உள்ளது. மேலும் மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் இருப்பு மதிப்பு, 34.4 கோடி டாலர் அதிகரித்து, 2,912 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.06லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
22-பிப்-202012:41:40 IST Report Abuse
Tamilan தொடர்ந்து இந்தியர்கள், இந்திய கார்போரேட்டுகள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப்பணம் வேலையாக மாறி கொஞ்சம் அந்நிய செலாவணியில் சேர்ந்து கொண்டிருக்கிறது . இத்துடன் , அந்நியர்களின் அந்நாட்டு கருப்பு பனங்களும் இந்தியா முதல் கொண்ட மற்ற நாடுகளில் அந்நிய முதலீடுகளாக வந்து கொண்டிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
22-பிப்-202011:05:22 IST Report Abuse
அசோக்ராஜ் இது நல்லதா கெட்டதா? வல்லுநர்கள் விளக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
22-பிப்-202010:54:35 IST Report Abuse
blocked user இந்தியர்கள் தீயாக வேலை செய்கிறார்கள்.. பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஆனால் ஒரு பக்கம் பொருளாதாரம் சரியில்லை நிதி நெருக்கடியில் நாடு தவிக்கிறது என்று ஒரு கோஷ்டி அலைகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X