அற்ப காரணங்களுக்காக, 'ஸ்டிரைக் : வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
அற்ப காரணங்கள்,'ஸ்டிரைக்#:வக்கீல்கள், சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடில்லி :'பாகிஸ்தானில் குண்டு வெடித்தது, நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது போன்ற காரணங்களை கூறி, ஒவ்வொரு சனிக்கிழமையும் உத்தரகண்ட் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பது கண்டனத்துக்குரியது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.உத்தரகண்டில், முதல்வர்திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு டேராடூன், ஹரித்வார், உதம் சிங் நகர் போன்ற பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில், வக்கீல்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக கூறி, உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.


latest tamil newsஇதை விசாரித்த, உயர் நீதிமன்றம், 2019ல் அளித்த தீர்ப்பு:பாகிஸ்தான் பள்ளியில் குண்டு வெடித்தது, நேபாளத்தில் நிலநடுக்கம், இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம், நதி நீர் இணைப்பு போன்ற காரணங்களை கூறி, வழக்கறிஞர்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் நீதிமன்றத்தை புறக்கணிக்கின்றனர்.இதனால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற போராட்டங்கள், சட்டவிரோதம்.இவ்வாறு, உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், நேற்று விசாரணைக்கு வந்தது; அப்போது, நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாவது:நேபாளத்தில் நில நடுக்கம், பாக்., பள்ளியில் குண்டு வெடித்தது போன்ற காரணங்களை கூறி, நீதிமன்றத்தை புறக்கணிப்பது சட்டவிரோதம் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே.இந்த உலகில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இடத்திலும், ஏதாவது ஒரு சம்பவம் நிகழத்தான் செய்யும். நீதிமன்றத்தை புறக்கணிப்பதற்கு இதையெல்லாம் ஒரு காரணமாக கூற முடியாது. இப்படி செய்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதலாம்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் நீதிமன்றத்திற்கு வராமலிருப்பதை எப்படி ஏற்க முடியும்; இது, நகைப்புக்கு இடமாக உள்ளது. வக்கீல்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர் ஒருவரின் உறவினர் இறந்து விட்டால், அதற்காக ஒட்டுமொத்த வக்கீல்களும் கோர்ட்டை புறக்கணிக்க வேண்டுமா; இது, எப்படி சரியாகும்?இவ்வாறு, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரானவர், 'டேராடூன் மாவட்டத்தில் நடந்த நீதிமன்ற புறக்கணிப்பு வாபஸ் பெறப்பட்டு விட்டது' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
22-பிப்-202017:02:05 IST Report Abuse
Cheran Perumal வழக்கு தனக்கு சாதகமான நீதிமன்றத்திற்கு வரும் வரையில் ஏதாவது ஒரு காரணத்தை கூறி நீதிமன்றத்திற்கு வராமல் இருப்பதும் இவர்களுக்கு வழக்கம்.
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
22-பிப்-202015:10:11 IST Report Abuse
Suri எந்த நீதிபதியாவது அரசின் விருப்பத்திற்கு மாறாக ... இல்லை அரசிற்கு சங்கடம் தரும் வகையில் தீர்ப்பு அளித்தால்.. உடனே பணி மாறுதல் தான்....இல்லை லோயா கதி....அப்படி தானே யுவர் ஹானர்??
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
22-பிப்-202015:08:40 IST Report Abuse
Suri அற்ப காரணங்களுக்காக தான் விசாரணை முடிந்து தீர்ப்பு எதிர்நோக்கி இருக்கும் வழக்குகள் கூட தீர்ப்பு அளிக்கப்படாமல் கிடைக்கின்றனவா??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X