லாலு வழக்கின் தீர்ப்பு சரியா? மீண்டும் விசாரிக்க முடிவு

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

புதுடில்லி: 'பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு சரியா என்பது குறித்து அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீஹார் முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் லாலுவை விடுவித்தது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து பீஹார் மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2010ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'இந்த வழக்கில் மனு தாக்கல் செய்யும் அதிகாரம் சி.பி.ஐ.க்கு தான் உள்ளது; மாநில அரசுக்கு இல்லை' என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சத்தீஸ்கர் மாநில அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.


latest tamil news



அப்போது 'கடந்த 2010ல் லாலு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறு' என சத்தீஸ்கர் அரசு சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து லாலுவுக்கு எதிரான வழக்கில் 2010ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியா என்பது தொடர்பான விசாரணையை அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அமித் ஜோகிக்கு எதிரான கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ganesan - kk nagar chennai,இந்தியா
24-பிப்-202007:29:21 IST Report Abuse
r ganesan ஒரு விடயம் சொல்லத்தான் வேண்டும். மன்மோகன் அரசு இவர் ஒருவரையாவது தண்டித்தது. அடுத்ததாக ஜெயலலிதாவும் சிறை சென்றார். மோடி அரசு ஒருவரை கூட தண்டிக்கவில்லை. அனால் வூழலை ஒழிக்கிறோம் என்று சொல்வதிலும் குறைச்சல் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-பிப்-202018:00:47 IST Report Abuse
Endrum Indian அய்யயோ அப்போ 4.01 கோடி பெண்டிங் வழக்குகளும் முடிந்து வழக்கு இல்லாமல் மறுபடியும் இந்த வழக்கை எடுத்துக்கொண்டதா இந்த கோர்ட்டு?? பெட்டி நன்றாக கிடைக்கும் என்று தெரிந்தா???
Rate this:
Share this comment
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-பிப்-202016:56:07 IST Report Abuse
Ramesh R கொஞ்சம் கூட வெட்கம் இல்லாதவர் இந்த லல்லு .... ஊழலின் ஊற்று நாட்டின் வெட்க கேடு இவன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X