தற்கொலை செய்ய கயிறு தாருங்கள்: தாயிடம் சிறுவன் கதறல்

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

பிரிஸ்பேன்: பள்ளியில் மாணவர்கள் கேலி செய்வதால், 'தற்கொலை செய்து கொள்ள துாக்கு கயிறு தாருங்கள்' என, 9 வயது சிறுவன் கதறும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



latest tamil news



ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த யார்ரகா பேலசிடம், நான்காம் வகுப்பு படிக்கும் அவரது, 9 வயது மகன் குவாடன், துாக்கு கயிறு கேட்டு கதறும் வீடியோவை, யார்ரகா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். குவாடனின் தலை பெரிதாகவும், கை, கால்கள் போதிய வளர்ச்சியின்றி, குள்ளமாக உள்ளான்.இதனால், பள்ளியில், சக மாணவர்கள் அவனை கேலி செய்கின்றனர். இதற்காகத்தான் அந்த சிறுவன், தன் அம்மாவிடம், 'தற்கொலை செய்து கொள்ள கயிறு தாருங்கள்' என, கேட்டு அழுதிருக்கிறான்.


latest tamil news



'என் மகனை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சென்ற போது, அவனை, சக மாணவர்கள் கேலி செய்வதை பார்த்தேன். 'ஒருவரை கேலி, கிண்டல் செய்வதால் ஏற்படும் விளைவுகளை, பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், இந்த வீடியோவைப் பார்த்து உணர வேண்டும்' என, யார்ரகா பதிவிட்டுள்ளார். 'என் இதயத்தை நானே குத்திக்கொள்ள விரும்புகிறேன்; யாராவது என்னை கொலை செய்து விடுங்களேன்' என, சிறுவன் கதறும் வீடியோ, பார்ப்போர் நெஞ்சங்களை பதற வைக்கிறது.வீடியோவைப் பார்த்தவர்கள், 'டீம் குவாடன்' என, 'ஹேஷ்டேக்' உருவாக்கி, அதில் சிறுவனுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர்

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rishi - varanasi,இந்தியா
23-பிப்-202015:37:33 IST Report Abuse
rishi கடவுளின் குழந்தை நீ உண் கண்களிலும் உன் உதட்டிலும் அடக்கி வைத்திருக்கும் சோகம், சராசரி மானுடனுக்கு புரியாது, கடவுளின் அருகாமையில் உள்ள வர்களுக்குத்தான் உண் வலி புரியும். அருள்பெரும்ஜோதி அருள்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருள்பெரும்ஜோதி ... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
23-பிப்-202014:39:56 IST Report Abuse
Rafi இந்த சிறுவனின் கதறலை உதாசீனப்படுத்திய அப்பள்ளி ஆசிரியர்கள் தலை குனிய வலைத்தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த தாய், அக்குழந்தைக்கு உன் அருகாமையில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள சில காலம் தேவைப்படலாம். நீ காண முடியாத பல கோடி மக்கள் உனக்கு ஆதரவாக இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டு, அவர்கள் அனைவரும் உன் பின்னால் இருக்கின்றார்கள் என்ற கம்பீரத்துடன் அறிவை வளர்த்து கொண்டு வாழ பழகி கொள், என்று புரிய வைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Balaji K S - Citizen,இந்தியா
22-பிப்-202011:30:15 IST Report Abuse
Balaji K S உண்மையை கூறினால் கேலி செய்தவர்கள் தான் வூனமுற்றவர்கள் ...என் பிள்ளையே நீ அவர்கள் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டுமடா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X