பொது செய்தி

தமிழ்நாடு

மார்ச் இறுதிக்குள் ரூ.30 க்கு பெட்ரோல்: மூலிகை ராமர் பிள்ளை தகவல்

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement

ராஜபாளையம்: ''மார்ச் இறுதிக்குள் ரூ. 30 விலையில் தமிழகம் முழுவதும் மூலிகை பெட்ரோல் கிடைக்கும்,'' என, மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை தெரிவித்தார்.



latest tamil news



விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தை சேர்ந்தவர் ராமர் பிள்ளை. உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்தில் தன்னுடைய மூலிகை பெட்ரோலை பதிவு செய்த அவர், ஜன. 29 முதல் சென்னையில் விற்பனையை துவங்கி உள்ளார்.

தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட விற்பனை முகவர்கள் அறிமுக விழா ராஜபாளையத்தில் நடந்தது.

இதை தொடர்ந்து அவர் கூறியதாவது: பிப். 27 முதல் மூலிகை பெட்ரோல் நேரடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் ரூ. 30 என அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. கன்னியாகுமரி - நாகர்கோவில் இடைப்பட்ட பகுதியில் நாளொன்றுக்கு 15,000 லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் வகையில் தொழிற்சாலை தயாராக உள்ளது.


latest tamil news



கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மாற்று எரிபொருளை தயாரிக்க எந்தவிதமான தடையும் விதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை தற்போது செயல்படுத்தி வருகிறோம். மார்ச் இறுதிக்குள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 21 ஆண்டுகளாக இந்த முயற்சியில் போராடி வருகிறேன். 500 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் அளவு மூலப் பொருட்களை இருப்பு வைத்துள்ளேன். விவசாய முறையில் மூலிகையை விளைவிக்கும் முயற்சி நடந்து வருகிறது. உலக காப்புரிமை பெறுவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. நான் நேரடியாக விற்பனை செய்யும் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.20, டீசல் ரூ.24க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளேன், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) உண்மை என்றால் வரவேற்க வேண்டும் ஆனால் பெரும் முதலை களிடமிருந்து இவர் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Elil Arasan Dhani - Melbourne,ஆஸ்திரேலியா
23-பிப்-202006:36:59 IST Report Abuse
Elil Arasan Dhani ..... இதற்கு கோர்ட்டையும் உபயோகப்படுத்தி உள்ளான்
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
22-பிப்-202020:14:18 IST Report Abuse
Sampath Kumar இன்னும் உங்களை நம்பும் கூட்டம் உள்ளது போல பார்த்து ச்ரவ தேசத்து அதிபர்கள் உங்களை கொல்லாமல் இருக்க ஆண்டவனை வேண்டு கின்றான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X