பொது செய்தி

இந்தியா

நிதி தொழில்நுட்ப முதலீடு; உலகில் 3வது இடத்தில் இந்தியா

Added : பிப் 22, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
India,இந்தியா,நிதிதொழில்நுட்பமுதலீடு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியாவில், நிதி தொழில்நுட்பங்களில் செய்யப்படும் முதலீடு, கடந்த ஆண்டில், இரு மடங்கு அதிகரித்துள்ளது.

இது குறித்து, 'அக்சென்சர்' நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், நிதி தொழில்நுட்பங்களில் செய்யப்படும் முதலீடு, கடந்த ஆண்டில், 26 ஆயிரத்து, 270 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இரு மடங்கு அதிகம். இதையடுத்து, உலகத்திலேயே, மூன்றாவது பெரிய நிதி தொழில்நுட்ப சந்தையாக இந்தியா முன்னேறி உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தை, இந்தியா பிடித்துள்ளது.


latest tamil news



கடந்த ஆண்டில், 198 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த, 2018ல் இது, 193 ஆக இருந்தது. பணப் பரிமாற்ற நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், கடந்த ஆண்டில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த, 2018ம் ஆண்டில், இப்பிரிவில், 4,686 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இதுவே, கடந்த ஆண்டில், 14 ஆயிரத்து, 910 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

காப்பீடு தொழில்நுட்பத்தில், கடந்த ஆண்டில் முதலீடுகள், 74 சதவீதம் அதிகரித்துள்ளது. முதலீடு செய்யப்பட்டுள்ள மொத்த தொகையில், பணப் பரிமாற்ற நிறுவனங்களில், 58 சதவீத அளவுக்கும், காப்பீடு தொழில்நுட்பத்தில், 13.7 சதவீத அளவுக்கும், முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
22-பிப்-202011:36:35 IST Report Abuse
Nallavan Nallavan Financial instruments சார்ந்த முதலீட்டைத்தான் நிதித் தொழில்நுட்ப முதலீடு என்று சொல்கிறார்களோ ??? இது மக்களின் முதலீடு, கார்ப்பரேட்டுகளின் முதலீடு அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் ..... இருந்தாலும் இது பெருமைக்குரிய விஷயமே ..... வங்கி டெபாசிட்டுகளை விட முதலீடுதான் அதிகம் பலன் தரக்கூடிய ஒன்றாக ஆகிவிட்டதே
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-பிப்-202009:12:44 IST Report Abuse
ஆரூர் ரங் FINTECH இல் முன்னேற்றம் என்பதே பொருளாதார வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் முன்னணிக்கு வர வழி
Rate this:
Share this comment
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
22-பிப்-202016:08:41 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஇததானய்யா கடந்த 6 வருஷமா சொல்லிக்கிட்டு வரீங்க… அன்னைக்கு ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு கிடையாது ஒரே பேச்சு எப்போ கேட்டாலும் பொருளாதாரம் வளரும்...நீங்கெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாடீங்க...போங்க ஹிந்துத்துவ ராமர் கோவில்ன்னு மத அரசியல் பண்ணுங்க ...நாடு குட்டிச்சுவராகாம ராமர் காப்பாத்துவார்......
Rate this:
Share this comment
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
23-பிப்-202009:45:15 IST Report Abuse
Nallavan Nallavan@மிருத்திகா ...... நீங்க ஆர்.எஸ்.எஸ். பாஜக மீதான வெறுப்புணர்வை வளர்ப்பதே லட்சியமாகக் கொண்டு செயல்படுறீங்க .... இங்கே ஆரூர் ரங் என்ன சொன்னார் என்று புரிந்து கொண்டிருக்கக் கூட மாட்டீர்கள் .........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X