சிஏஏ, என்ஆர்சி., பற்றி பயப்பட தேவையில்லை : உத்தவ் தாக்கரே

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : சிஏஏ மற்றும் என்ஆர்சி பற்றி யாரும் பயப்பட தேவையில்லை எனவும், அது பற்றி பிரதமருடன் ஆலோசித்து விட்டதாகவும் மஹாராஷ்டிர முதல்வரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.



latest tamil news



மஹா., முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக டில்லி சென்ற உத்தவ் தாக்கரே, நேற்று (பிப்.,21) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், பிரதமரிடம் சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர்., குறித்து ஆலோசித்தோம். இந்த விவகாரத்தில் எனது நிலைப்பாடு குறித்து அவரிடம் தெளிவாக கூறி விட்டேன். சிஏஏ குறித்து பயப்பட அவசியமில்லை. இந்த சட்டத்தால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் பயனடைவார்கள். என்ஆர்சி நாடு முழுவதும் அமல்படுத்தப்படாது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மக்களை பாதிக்கும் விதமாக அதில் ஏதாவது ஆபத்து இருப்பதாக உணர்ந்தால் நாங்கள் அதனை எதிர்ப்போம் என்றார்.


latest tamil news




latest tamil news


மேலும் என்பிஆர் குறித்து எதிர்ப்பு ஏற்பட்டால், அதன் பணிகள் உடனடியாக நிறுத்தப்படும். சிஏஏ, என்ஆர்சி., மற்றும் என்பிஆர் விவகாரத்தில் எங்களின் நிலைப்பாடும், கூட்டணி கட்சிகளான காங்., மற்றும் தேசியவாத காங்., நிலைப்பாடும் வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால் குறைந்தபட்ச பொது திட்டத்தின் அடிப்படையில் கூட்டணியை தொடர்வோம். இதில் எந்த பிரச்னையும் இல்லை என்றார். பிரதமரை தொடர்ந்து காங்., இடைக்கால தலைவர் சோனியா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் உத்தவ் தாக்கரே சந்தித்தார்.


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri Ra - Chennnai,இந்தியா
22-பிப்-202016:51:40 IST Report Abuse
Sri Ra அடிச்சார்டா சூப் பல்டி வெச்சார் ஆப்பு காங்கிரசுக்கு
Rate this:
Share this comment
Cancel
??????? - Thiruvaiyaru,இந்தியா
22-பிப்-202015:38:49 IST Report Abuse
??????? இந்த புழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்
Rate this:
Share this comment
kumzi - trichy,இந்தியா
22-பிப்-202023:35:26 IST Report Abuse
kumziபார்ர்ரா நாட்டை நேசித்தால் தேசத்துரோகி மூர்க்கனுக்கு கோவம் வருது...
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
22-பிப்-202014:23:01 IST Report Abuse
anbu முதலமைச்சர் ஆக வரமுடியாது என்ற பயத்தில் இப்படியேனும் புரளியை கிளப்பிவிட்டு குட்டையை கலக்கி மீன் படிக்கச் துடிக்கிறார் நம்ம சப்பான் துணை முதல்வர். கலவரத்தை தூண்டி பாகிஸ்தான் சனாதிபதி ஆகலாம் என சன்னி பிடித்து அலையுறார். சட்டசபையில் கேள்வி கேட்டால் ஓட்டம் பிடிக்கிறார். இவர் பேச்சை நம்பி முரசொலி படிச்சவங்களும், சோலி முடிப்பவர்களும் இவருடைய வண்டவாளம் புரியாமல் ஆர்ப்பாட்டம் செய்வதுதான் வேடிக்கை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X