பொது செய்தி

இந்தியா

ராமர் கோயில் கட்ட அரசு நிதியை பெற மாட்டோம்

Updated : பிப் 22, 2020 | Added : பிப் 22, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

குவாலியர் : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு அளிக்கும் நிதியை பெற மாட்டோம் எனவும், பொது மக்கள் அளிக்கும் பங்களிப்பில் மட்டுமே இக்கோயில் கட்டப்படும் என ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்திய கோபால் தாஸ் மகராஜ் தெரிவித்துள்ளார்.



latest tamil news


கோபால் தாஸ் மகராஜ் தலைமையிலான ராமர் கோயில் அறக்கட்டளை பிரதிநிதிகள் டில்லியில் பிப்.,20 அன்று பிரதமரின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரதமரை சந்தித்து விட்டு குவாலியர் திரும்பிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய கோபால் தாஸ் மகராஜ், ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் துவக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு அழைப்பு விடுத்து விட்டோம். மத நம்பிக்கை உள்ள அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இந்த பிரம்மாண்ட விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படும். ம.பி., முதல்வருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.


latest tamil news



ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு தரும் நிதியை பெற போவதில்லை. பொது மக்களின் பங்களிப்பையும், அவர்கள் வழங்கும் நன்கொடையை கொண்டே இந்த கோயில் கட்டப்படும். அரசுக்கு ஏற்கனவே தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் நிறைய உள்ளது.இதில் நாங்களும் கூடுதல் சுமையாக இருக்க முடியாது. அயோத்தி வர பிரதமரை சந்தித்து அழைப்பு விடுத்தோம். எங்களின் அழைப்பு குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். பிரம்மாண்ட கோயிலை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் எனவும் அவர் கூறி உள்ளார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
22-பிப்-202022:51:47 IST Report Abuse
venkatan ஸ்ரீ ராமரின் மூல அவதாரமான எல்லாம் வல்ல சௌலப்ய, சௌசீல்ய வைத்த மாநிதிப்பெருமாள் பெருநிதியம் அளிப்பான்..குபேரன் தன் செல்வத்தின் ஒரு பகுதியையும் அளிப்பான்ஸ்ரீ ராம ஜெயம்...
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
22-பிப்-202021:16:55 IST Report Abuse
Rajagopal இந்துக் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
22-பிப்-202018:11:36 IST Report Abuse
Vijay D Ratnam வேண்டாம், ராமர் கோவில் கட்ட மத்திய அரசு தரும் நிதி தேவையில்லை. ஹிந்துக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வந்து கொட்ட தயாராக இருக்கிறார்கள். வாடிகன் மாதிரி, மெக்கா மாதிரி நாடெங்கும், உலகெங்கும் உள்ள ஹிந்துக்களின் புனித ஸ்தலமான ராமர் கோவில் உலகின் பிரமாண்டமான கட்டுமானமாக இருக்கவேண்டும். இந்தியாவின் அடையாளம் ஆக திகழவேண்டும். ராமர் கோவில் ஒவ்வொரு ஹிந்துவின் பங்களிப்பும் இருக்கவேண்டும். திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஆயிரம்கோடி வழங்கலாம். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் ஆயிரம் கோடி வழங்கலாம். சபரிமலை அய்யப்பன் கோவில் ஆயிரம்கோடி வழங்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X